ETV Bharat / state

’7500 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள்’ - அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை: அடுத்த மாத இறுதிக்குள் 7, 500 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்படவிருக்கிறது என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

7500 school class room change into smart class rooms with in a month
author img

By

Published : Oct 3, 2019, 3:11 AM IST

மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழா சென்னை கிண்டியிலுள்ள காந்தி மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அமைச்சர் செங்கோட்டையன், அமைச்சர் கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், "இங்கே வருகை தந்திருக்கும் மாணவர்கள் தங்களது எதிர்காலத்தைப் பற்றி கவலைப்பட வேண்டாம். காந்தி கண்ட கனவை நனவாக்கும் வகையில் மாணவர்களின் நலனுக்காக இந்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டுதான் முன்னாள் முதலமைச்சர் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கினார். இந்தியாவில் அதிக மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கிய பெருமை ஜெயலலிதா ஒருவரைத்தான் சாரும்.

அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு

இந்திய வரலாற்றில் 45 லட்சத்து 72 ஆயிரம் மடிக்கணினிகள் வழங்கப்பட்டிருப்பது தமிழ்நாட்டில் மட்டும்தான். மேலும் 9, 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களின் வகுப்பறை அடுத்த மாத இறுதிக்குள் கணினி முறைக்கு மாற்றப்படும்.

அடுத்த வார இறுதிக்குள் இணையசேவை வழங்கப்படவிருக்கிறது. அதே போல் 6, 7, 8ஆம் வகுப்புகளில் படிக்கின்ற மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அடுத்த மாத இறுதிக்குள் 7500 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்படும்.

கரும்பலகைகளுக்குப் பதிலாக 90 ஆயிரம் ஸ்மார்ட் போர்ட்டுகள் பொருத்தப்படவிருக்கிறது. இதன்மூலம் மாணவர்களுக்கு சிறந்த கல்வி கிடைக்கும் "என்றார்.

இதையும் படிங்க: ஆரணியில் 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி; மாவட்ட ஆட்சியர் தொடக்கம்!

Intro:Body:அண்ணல் காந்தியிடிகளின் 150 வயது பிறந்தநாள் விழா சென்னை கிண்டியிலுள்ள காந்தி மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், பள்ளிக் கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் செங்கோட்டையன், செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் பங்கேற்று மாணவ மாணவிகாளுக்கு பரிசுகளை வழங்கினார்கள்.

அப்போது பேசிய அமைச்சர் செங்கோட்டையன், "தமிழகத்தின் வரலாற்றில் இந்திய துணைக் கண்டத்தின் வரலாற்றில் நம்முடைய தேசபிதா அண்ணல் காந்தியடிகள் கண்ட கனவை நிறைவேற்றுகின்ற அரசாக இந்த அரசு இருந்துகொண்டிருக்கிறது.

நாட்டில் வாழ்கின்ற ஒவ்வொரு குழந்தைகளும் சிறந்த கல்வியாளர்களாக வேண்டும் அதற்கான அமைதியான சூழலை உருவாக்குவது நான் கத்தி எடுக்காமல் ரத்தம் சிந்தாமல் பெற்றுத் தருவேன் என்ற பெருமை உலக வரலாற்றில் அண்ணல் காந்தியடிகளை சாறும்.

நல்ல விதைகளை விதைக்கின்ற போதுதான் நல்ல வளங்களை நாம் அறுவடை செய்ய முடியும் என்று எடுத்துக்காட்டியவர் காந்தியடிகள். அதனடிப்படையில் இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும் என்பது தான் அண்ணல் காந்தியடிகளின் கனவு. அந்த கனவு இன்று நிறைவேற்றப்பட்டு வருகிறது.

இந்திய நாட்டின் வரலாற்றில் தமிழகத்தின் வரலாற்றில் சாரண சாரணிய இயக்கத்தில் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் தேசிய அளவில் நான்கு பேரில் ஒருவராக தேந்தெடுக்கப்படௌடுள்ளார் என்று சொன்னால் இது தமிழகத்துக்கு கிடைத்த பெருமை என்பதை கூறிக்கொள்ள விரும்புகிறேன். இதற்குமுன் தமிழ்நாட்டிலிருந்து ஒருவர்கூட இதில் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இதுவே முதல் முறை.

இங்கே வருகை தந்திருக்கும் மாணவர்கள் அவர்கள் எதிர்காலத்தை பற்றி கவலை கொள்ள வேண்டாம். ஏனென்றால் அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் விலையில்லா மடிக்கணினி வழங்கிய பெருமை இந்தியாவிலேயே புரட்சித் தலைவி அம்மாவுக்கே மட்டுமே உரியது.

இன்று அம்மா நம்முடன் இல்லை. அந்த பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கும் முதல்வர் சிறப்பாக பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்திய வரலாற்றில் 45 லட்சத்து 72 ஆயிரம் மடிக்கணினி வழங்கப்பட்டிருப்பது தமிழகத்தில் மட்டும்தான்.

மேலும் 9, 10, 11, 12 ஆகிய வகுப்புகளில் படிக்கின்ற மாணவ மாளிகளுக்கு அனைத்து வகுப்புகளிலும் அடுத்த மாத இறுதிக்குள் கணினி முறைக்கு மாற்றப்படும். அடுத்த வார இறுதிக்குள் இன்டர்நெட் சேவைகள் வழங்கப்படும் என்பதை நான் தெரிவித்து கொள்கிறேன்.

அதேபோல் 6,7,8 வகுப்புகளில் படிக்கின்ற மணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தான் அடுத்த மாத இறுதிக்குள் 7500 பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் கொண்டுவரப்படும்.

தமிழகத்தில் இருக்கின்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்கள் கருப்பு பலகையில் எழுதுவதற்கு பதிலாக 90 ஆயிரம் ஸ்மார்ட் போர்ட்டுகள் கொண்டுவரப்படும். இதன்மூலம் சிறந்த கல்வியாளர்களை உருவாக்க முடியும். அதற்கு மாணவர்கள் இந்நாளில் சபதம் ஏற்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.