ETV Bharat / state

75 கோடி ரூபாய்க்கு புதிய டயர்கள்: போக்குவரத்துக் கழகம் முடிவு!

சென்னை: நல்ல நிலையில் உள்ள பேருந்துகளின் தேய்ந்த டயர்களுக்கு பதிலாக புதிய டயர்களை மாற்ற போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.

Tn buses
author img

By

Published : Jun 3, 2019, 3:22 PM IST

தமிழ்நாட்டில் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் மூலம் தினமும் ஏராளமான பேருந்துகள் இயக்கப்பட்டுவருகின்றன. இவற்றில் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்வோர், வேலைக்குச் செல்வோர், இதர பணிகளுக்காக செல்வோர் என தினமும் ஏராளமானோர் பயணம் செய்கின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாக புதிய பேருந்துகள் வாங்காததால், காலாவதியான பேருந்துகளே தற்போதும் ஓடிக்கொண்டிருக்கின்றன. தற்போது பயன்பாட்டில் இருக்கும் பேருந்துகளை ஆய்வுசெய்த போக்குவரத்து அலுவலர்கள், நல்ல நிலையில் உள்ள பேருந்துகளின் பழைய டயர்களுக்கு பதிலாக, புதிய டயர்களை வாங்கி பொருத்திட முடிவு செய்திருக்கின்றனர்.

அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு சொந்தமான எட்டு கோட்டங்களைச் சார்ந்த அரசுப் பேருந்துகளுக்கு, சுமார் 75 கோடி ருபாய் செலவில் புதிய டயர்களை பொருத்த போக்குவரத்துத் துறை அலுவலர்கள் திட்டமிட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம், விழுப்புரம், சேலம், கோவை, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து கோட்டங்கள் உள்ளன. இங்கிருந்து சுமார் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டுவருகின்றன. இதில் நாள்தோறும் 1.50 கோடிக்கும் மேலானோர் பயணிக்கின்றனர்.

இந்நிலையில் இது குறித்து போக்குவரத்துத் துறை உயர் அலுவலர்கள் தரப்பில், அரசு போக்குவரத்துக் கழகத்தால் இயக்கப்படும் பேருந்துகளில் டயர்கள் தேய்ந்துவிட்டன. எனவே அதை மாற்ற முடிவு செய்துள்ளோம். ஆய்வு செய்ததில், எம்டிசியில் இயக்கப்படும் பேருந்துகளுக்கு 4,783 புதிய டயர்களும், எஸ்இடிசி-3,000; விழுப்புரம்-6,708; சேலம்-4,848; கோவை-7,200; கும்பகோணம்-6,736; மதுரை-6,048; திருநெல்வேலி-3,502 என மொத்தமாக 42,825 டயர்கள் தேவை என்பது தெரியவந்தது.

இதற்காக ரூ.75 கோடி செலவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது அதற்கான பணிகள் வேகமாக நடந்துவருகிறது என்று தெரிவித்தனர்.

அரசு பேருந்துகளுக்கு புதிய டயர் - போக்குவரத்து கழகம் முடிவு 

தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகங்கள் மூலம் தினமும் ஏராளமான  பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வோர், வேலைக்கு செல்வோர், மற்ற ஊர்களுக்கு இதர பணிகளுக்காக செல்வோர் என தினமும் ஏராளமானோர்  பயணம் செய்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாக புதிய பேருந்துகள் வாங்காததால், காலா வதியான பேருந்துகளே தற்போதும் ஓடி கொண்டு இருக்கின்றன. தற்போது பயன்பாட்டில் இருக்கும் பேருந்துகளை ஆய்வு செய்த போக்குவரத்து அதிகாரிகள் ஓரளவிற்கு நல்ல நிலையில் இருக்கும் பேருந்துகளின் பழைய டயர்களுக்கு பதிலாக, புதிய  டயர்களை வாங்கி, பொருத்திட முடிவு  செய்திருக்கின்றனர். 

அரசு போக்குவரத்துக்கழகத்துக்கு சொந்தமான 8 கோட்டங்களை சார்ந்த  அரசு பேருந்துகளுக்கு , சுமார் 75 கோடி ருபாய் செலவில் புதிய டயர்களை பொருத்த போக்குவரத்து துறை  அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக  தெரிவித்துள்ளார்கள். 

 தமிழகத்தில், சென்னை மாநகர் போக்குவரத்துக்கழகம், எஸ்இடிசி, விழுப்புரம், சேலம், கோவை, கும்பகோனம், மதுரை, திருநெல்வேலி ஆகிய  இடங்களில் போக்குவரத்து  கோட்டங்கள் உள்ளன. இங்கிருந்து சுமார் இருபது  ஆயிரத்துக்கும்  மேற்பட்ட பேருந்துகள்  இயக்கப்பட்டு வருகிறது. இதை நாள்தோறும் 1.50 கோடிக்கும்  மேலான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். 
இந்நிலையில் பேருந்துகளை  ஆய்வு செய்த  அதிகாரிகள், தற்போது பயன்பாட்டில் இருக்கும் பேருந்துகளில் , ஓரளவிற்கு நல்ல நிலையில் இருக்கும் பேருந்துகளின்  டயர்கள், நீண்ட தூரம் ஓடிய காரணத்தால் தேய்ந்து விட்ட காரணத்தால்  அதற்கு பதிலாக புதிய டயர்களை வாங்கி, பொருத்திட முடிவு  செய்திருக்கின்றனர். அதற்கு 75 கோடி செலவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து போக்குவரத்துத்துறை உயர் அதிகாரிகள் தரப்பில் தெரிவித்ததாவது :
அரசு போக்குவரத்துக்கழகத்தால் இயக்கப்படும் பஸ்களில் டயர்கள் தேய்ந்து விட்டது. எனவே அதை மாற்ற முடிவு செய்துள்ளோம். அதுகுறித்து ஆய்வு  செய்ததில், எம்டிசியில் இயக்கப்படும் பஸ்களுக்கு 4,783 புதிய டயர்களும், எஸ்இடிசி-3,000; விழுப்புரம்-6,708; சேலம்-4,848; கோவை-7,200;  கும்பகோணம்-6,736; மதுரை-6,048; திருநெல்வேலி-3,502 என மொத்தமாக 42,825 டயர்களும் தேவை என்பது தெரியவந்தது. இதற்காக ₹75 கோடி  செலவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது அதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகிறது என்று தெரிவித்தனர். 
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.