மகாத்மா காந்தியின் 74ஆவது நினைவு நாளையொட்டி இன்று, சென்னை மெரினா கடற்கரை அருகே காமராஜர் சாலையில் உள்ள மகாத்மா காந்தியின் உருவச் சிலைக்கு கீழ் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்ட அவரது உருவப்படத்திற்கு, தமிழ்நாடு அரசு சார்பில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி.கே.பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
இதனையடுத்து, அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், பென்ஜமின், ராஜேந்திர பாலாஜி, எஸ்.பி.வேலுமணி, கே.பி.அன்பழகன், பாண்டியராஜன், கடம்பூர் ராஜூ, எம்.சி.சம்பத் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினார்கள்.
மகாத்மா காந்தியின் சிலை முன்பு தியாகிகள் சங்கம் சார்பில் "காந்தியின் புகழ்பாடு வண்ணம்" பஜனை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் கண்டு ரசித்தனர். அதனையடுத்து, ராட்டினம் மூலம் பஞ்சால் நெய்த நூலை மூதாட்டி ஒருவர், பன்வாரிலால் புரோகித், முதல்வர், துணை முதல்வர் ஆகியோருக்கு வழங்கினார்.
இதையும் படிங்க: அரசு உயர்நிலைப்பள்ளி அமைக்கக் கோரி பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் ஆட்சியரிடம் மனு!