ETV Bharat / state

71 லட்சம் தடுப்பூசிகள் கொண்டு வரப்படும் - அமைச்சர் மா.சுப்ரமணியன் - 71 lakh corona vaccince will bring for july month

ஜூலை மாதத்தில் தமிழ்நாட்டிற்கு 71 லட்சம் தடுப்பூசி மருந்துகள் கொண்டு வரப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

டயாலிசிஸ் மையம் திறப்பு
டயாலிசிஸ் மையம் திறப்பு
author img

By

Published : Jun 28, 2021, 3:39 PM IST

சென்னை: திருவொற்றியூர் மாநகராட்சிக்கு சொந்தமான நகர்புற சமுதாய நல மருத்துவமனையில் ரூ. 82 லட்சம் செலவில் கட்டப்பட்ட டயாலிசிஸ் சிகிச்சை மையத்தை அமைச்சர் மா.சுப்ரமணியன் இன்று (திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "திருவொற்றியூர் மக்களுக்கு பயன்படும் வகையில் ரூ.82 லட்சம் செலவில் இந்த டயாலிசிஸ் மையம் திறக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் ஒரு முறை டயாலிசிஸ் செய்ய மாதத்திற்கு ரூ.10 ஆயிரம் செலவாகும் நிலையில் நடுத்தரம், ஏழை, எளியோர் பயன்படும் வகையில் இந்த டயாலிசிஸ் மையம் திறக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு ரோட்டரி மற்றும் அரிமா சங்கம் இணைந்து பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றன.

டயாலிசிஸ் மையத்தை அமைச்சர் திறந்து வைத்தார்

தமிழ்நாட்டிற்கு இதுவரை 1 கோடி 44 லட்சம் தடுப்பூசிகள் கொண்டு வரப்பட்டு 1 கோடியே 41 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. தடுப்பூசி பற்றாக்குறையைப் போக்க கூடுதல் தடுப்பூசிகள் வழங்க ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை இரண்டு லட்சம் தடுப்பூசிகள் வர உள்ளன. மேலும் ஜூலை மாதத்தில் 71 லட்சம் தடுப்பூசிகள் கொண்டு வரப்பட உள்ளது.
மழை காலங்களில் நீர் தேக்கம் இருக்கக்கூடாது என்பதற்காக சென்னை மாநகராட்சி முழுவதும் கழிவு நீர் கால்வாய்களை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெறுகிறது. கரோனா மூன்றாம் அலை வந்தாலும் அதற்கான முன்னேற்பாடுகளை அரசு செய்துள்ளது. மூன்றாம் அலை குறித்து மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை" என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.பி.சங்கர், மாதவரம் சுதர்சனம், திமுக பொதுக்குழு உறுப்பினர் குறிஞ்சி கணேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: 'டேக்' செய்த ஜெர்மன் வாழ் தமிழ் பெண்.. உதவிக்கரம் நீட்டிய அமைச்சர்..

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.