ETV Bharat / state

தாம்பரம் போக்குவரத்து அலுவலகத்தில் ரூ.70,840 பறிமுதல்

தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனையில் கணக்கில் வராத ரூ.70,840 சிக்கியது.

தாம்பரம் போக்குவரத்து அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.70,840 பறிமுதல்

author img

By

Published : Oct 21, 2022, 9:15 AM IST

சென்னை தாம்பரத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் பல்வேறு சான்றிதழ்கள் வழங்குவதற்கு புரோக்கர்கள் மூலம் லஞ்சமாக பணம் பெறுவதாக கிடைத்த தகவலில் அடிப்படையில் அங்கு சென்னை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புதுறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆய்வு குழும அலுவலர்களுடன் இணைந்து தீடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் உள்ளே இருந்த புரோக்கர்களிடமிருந்து கணக்கில் வராத ரொக்கம் ரூ.70,840 கைப்பற்றப்பட்டது. இதையடுத்து புரோக்கர்களிடம் விசாரணை செய்தபோது, வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலனுக்கும், மோட்டார் வாகன ஆய்வாளர் சிவகுமார் மற்றும் இதர அலுவலருக்காகவும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்களுக்காக கையூட்டு வசூல் செய்து வைத்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலரிடமும் மற்ற அதிகாரிகளிடமும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் கீழ் தாம்பரத்தை சுற்றியுள்ள 24 தாலுகாக்கள் உள்ளன. இந்த அலுவலகத்தின் மூலம் வாகன பதிவேடு, ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க: யாதவ சமுதாயத்தை இழிவுபடுத்தி பேசியதாக சீமான் மீது புகார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.