சென்னை: இதுதெடார்பாக தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "தமிழ்நாட்டில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் 702 குளிர்சாதனப் பேருந்துகள் இயக்கப்படும். கரோனா பெருந்தொற்று சூழலைக் கருத்தில் கொண்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு உரிய விதிகளை பின்பற்றி குளிர்சாதன பேருந்துகள் இயக்கப்படும்.
தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் குளிர் சாதன பேருந்து போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அக்டோபர் மாதத்தில் அவை இயக்கப்படவுள்ளன.
சென்னை மாநகரில் 48 குளிர்சாதன பேருந்துகளும், அரசு விரைவு போக்குவரத்து கழகம் (SETC) சார்பாக 340 குளிர்சாதனப் பேருந்துகள் இயக்கப்படு இருக்கின்றன.
பேருந்துப் பயணிகள் முகக் கவசம் அணிந்து பயணிக்க வேண்டும், பயணிகளுக்கு நடத்துனர் வாயிலாக கிருமிநாசினி வழங்கப்படும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
கரனோ இரண்டாம் அலை தீவிரமெடுத்த நிலையில் இந்தாண்டு மே 10ஆம் தேதி குளிர்சாதனப் பேருந்து சேவை நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ’புதிய பேருந்துகளை இயக்க ஜெர்மனியுடன் பேச்சுவார்த்தை’ - அமைச்சர் ராஜகண்ணப்பன்