ETV Bharat / state

குளம்போல் நிரம்பிய ஓடுபாதை : தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த விமானங்கள்! - குளம்போல் நிரம்பிய ஓடுபாதை

சென்னை : விமான நிலைய ஓடுபாதைகளில் குளம்போல் தண்ணீா் தேங்கியதால், சென்னையில் தரையிறங்க வேண்டிய ஏழு விமானங்கள் வானில் தொடா்ந்து வட்டமடித்து மழை குறைந்ததும் தாமதமாகத் தரையிறங்கின.

indigo
indigo
author img

By

Published : Nov 24, 2020, 7:05 PM IST

நிவா் புயல் காரணமாக சென்னை விமான நிலையப் பகுதியில் நேற்று (நவ.23) இரவிலிருந்து விட்டு விட்டு பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், இன்று (நவ.24) பிற்பகல் வரை விமான சேவைகள் பெரிய அளவில் பாதிப்பு இல்லாமல் இருந்தது. ஆனால், 3.30 மணிக்கு மேல் இடைவெளி இல்லாமல் பெய்த கனமழையால், சென்னை விமான நிலைய ஓடுபாதைகள் இரண்டிலும் குளம் போல் தண்ணீா் தேங்கியது.

ஆனாலும், சென்னையிலிருந்து புறப்படும் விமானங்கள் வழக்கம் போல் புறப்பட்டுச் சென்று வருகின்றன. தரையிறங்கும் விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்து வருகின்றன. மழை சிறிது ஓய்ந்து ஒடுபாதையில் தண்ணீா் வடிந்ததும், விமானங்கள் ஒன்றன் பின் ஒன்றாகத் தரையிறங்குகின்றன.

இன்று (நவ.24) 3.15 மணிக்கு ஜோத்பூரிலிருந்து 117 பயணிகளுடன் வந்த விமானம், மாலை நான்கு மணிக்கு 77 பயணிகளுடன் டில்லியிலிருந்து வந்த விமானம், மாலை 4.10 மணிக்கு 134 பயணிகளுடன் ஹைதராபாத்திலிருந்து வந்த விமானம், மாலை 4.15 மணிக்கு 159 பயணிகளுடன் பாட்னாவிலிருந்து வந்த விமானம், மாலை 4.20 மணிக்கு அந்தமானிலிருந்து 148 பேருடன் வந்த விமானம் உள்ளிட்ட ஏழு விமானங்கள் சென்னையில் தரையிரங்க முடியாமல் தவித்தபடி வானில் தொடர்ந்து வட்டமடித்தன.

பின்பு மழை சிறிது ஓய்ந்ததும் மாலை ஐந்து மணியளவில் ஒன்றன்பின் ஒன்றாக சுமாா் ஒரு மணி நேரம் வரை தாமதமாகத் தரையிறங்கின. இந்த மழை தொடருமேயானால் விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பப்படுவது அல்லது ரத்து செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்று விமான நிலைய அலுவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இன்று இரவு 8.35 மணிக்கு சென்னையிலிருந்து 32 பயணிகளுடன் திருச்சி செல்லும் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நிவர் புயல் மின்சார வாரியத் தொடர்பு எண்கள் அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.