ETV Bharat / state

ஷேர் ஆட்டோக்களில் ’நேக்காக’ நகை திருடும் பிரபல பெண் கும்பல் கைது

author img

By

Published : Oct 20, 2020, 6:57 PM IST

சென்னை: ஷேர் ஆட்டோக்களில் பயணிக்கும் மூதாட்டிகளின் கவனத்தைத் திசை திருப்பி நகைகளைக் திருடி வந்த 7 பேர் கொண்ட பெண் கும்பலை காவல் துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்தனர்.

chain_robbery
நகை திருடும் பிரபல பெண் கும்பல் கைது

வட சென்னையில் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக மூதாட்டிகளைக் குறிவைத்து தங்க நகைகளைத் திருடும் கும்பலைப் பிடிக்க சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டார். அதன்படி வடக்கு மண்டல இணை ஆணையர் பாலகிருஷ்ணன், வண்ணாரப்பேட்டை உதவி ஆணையர் ஜூலியஸ் சீசர், உதவி ஆணையர் ஆனந்தகுமார், ஆய்வாளர் புவனேஸ்வரி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு அக்கும்பலைத் தேடி வந்தனர்.

இந்தக் கும்பல் ஷேர் ஆட்டோக்களில் செல்லும் வயதான மூதாட்டிகளிடம் செயின் அறுந்து விட்டதாகக் கூறி பையில் வைக்குமாறு அவர்களிடம் நூதன முறையில் தொடர் திருட்டில் ஈடுபட்டுவந்தனர்.

இதனைத் தடுக்கும் வண்ணம் தனிப்படை காவல் துறையினர் மாறுவேடத்தில் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில் சந்தேகத்திற்கிடமாகச் சுற்றிவந்த 7 பெண்களைக் கண்காணிப்பு கேமராக்களின் உதவியோடு கண்டறிந்து அவர்களிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் புது வண்ணாரப்பேட்டை பகுதியில் ராணி என்பவர் தலைமையில் ராஜாமணி, திலகா, மரியா ஆகிய நான்கு பேர் ஒரு பிரிவாக செயல்பட்டு திருடியதும், கொருக்குப்பேட்டை கேஎன்எஸ் டிப்போ அருகே இசக்கி அம்மாள் என்பவர் தலைமையில் உஷா, லஷ்மி என்று மற்றொரு குழுவாக செயல்பட்டு வந்ததும் தெரியவந்தது.

இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் தூத்துக்குடி மாவட்டம் மந்தித்தோப்பு பகுதியை சேர்ந்தவர்கள் என்றும், வயதானவர்களைப் பின் தொடர்ந்து அவர்களிடம் பேச்சுக் கொடுத்து அவர்கள் நம்பிய பின்னர் திருடுவதை வாடிக்கையாகக் கொண்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இவர்களிடமிருந்து சுமார் 200 கிராம் (25 சவரன்) தங்க நகைகளை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் ஏழுவர் மீதும் புதுவண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, ஆர்கே நகர், வில்லிவாக்கம், எஸ்பிளனேடு, பூக்கடை, பேசின்பிரிட்ஜ், எழும்பூர் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நகை திருடும் பிரபல பெண் கும்பல் கைது

பொதுமக்களே கவனம்..

முதலில் ஷேர் ஆட்டோவில் ஏறுவதும், பின்னர் வயதானவர்களின் கவனத்தைத் திசைத் திருப்பி தங்கச் சங்கிலியை வெட்டி திருடுவதும் இவர்களது பாணி. தற்போது தீபாவளியையொட்டி, மூதாட்டிகளிடம் நகைகளைத் திருட சென்னையில் தங்கி இருந்த நிலையில், தனிப்படை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க:தூத்துக்குடியில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் வெட்டிக்கொலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.