துபாய், சாா்ஜா, மலேசியா, இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து சென்னைக்கு வந்த விமானம் மூலம் சந்தேகத்திற்குரிய வகையில் 7 பேர் வந்துள்ளனர். இவர்களின் உடைமைகளை விமான நிலைய அலுவலர்கள் சோதனை செய்கையில், 2.5 கிலோ கிராம் தங்கம் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.87.5 லட்சம் எனக்கூறப்படுகிறது.
குறிப்பாக சூட்கேஸ் ட்ராலி, இடியாப்பம் பிழியும் கருவி, உள்ளாடை ஆகியவற்றில் மறைத்து வைத்து தங்கத்தை கடத்தியுள்ளனர்.
இந்த 7 பேரும் ராமநாதபுரம், திருவாரூா், சென்னை மற்றும் கேரள மாநிலத்தைச் சோ்ந்தவர்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. கடத்தி வரப்பட்ட தங்கக் கட்டிகள், தங்க ராடுகள் ஆகியவற்றை சுங்கத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்ததோடு, கடத்தலில் ஈடுபட்ட 7 பேரையும் கைது செய்தனர்.
இதையும் படிங்க: 'இறக்கையில் பழுது, நடுவானில் வட்டம், 123 பேர் உயிர்' - பரபரப்பான சென்னை விமான நிலையம்!