சென்னை: 7.5 விழுக்காடு உள் இடஒதுக்கீடு மூலம் மருத்துவ படிப்பில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள், இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய மருத்துவ மாணவி ஜெயப்பிரதா, மருத்துவப் படிப்பு என்பது இதுவரை பலருக்கு கனவாகவே இருந்தது. தமிழ்நாடு அரசு மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டை அமல்படுத்தியதன்மூலம், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கனவு நிறைவேறியது.
இதுவரை அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்வது குறைவாக இருந்து வந்தது, இனிவரும் காலங்களில் அரசு பள்ளி மாணவர்கள் அதிக அளவில் மருத்துவ படிப்புகளில் சேர இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்து உள்ளது என்று கூறினார்.
தங்களது மருத்துவக் கனவை நிறைவேற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 7.5% இடஒதுக்கீடு: 'காத்திருப்போர் பட்டியலில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மறு கலந்தாய்வில் முன்னுரிமை'