சென்னையில் கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. சென்னையில் நேற்று (ஜூன் 16 ) மட்டும் கரோனா தொற்றால் 689 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரோனா தொற்றுப் பரவும் பகுதியில், தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்துவதற்கு அந்தந்தப் பகுதி முழுவதும் அதிக மருத்துவ முகாம்களை நடத்துவது, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்டு வருகின்றன.
சென்னையில் இதுவரையிலும் 5 லட்சத்து 27 ஆயிரத்து 283 பேர் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 5 லட்சத்து 12 ஆயிரத்து 832 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மீதமுள்ள 6 ஆயிரத்து 531 பேர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும், தொற்றால் பாதிக்கப்பட்ட 7ஆயிரத்து 920 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், மண்டல வாரியான பாதிக்கப்பட்டோரின் பட்டியலை மாநகராட்சி வெளியிட்டுள்ளது;
மண்டலம் | பாதிக்கப்பட்டவர்கள் | குணமடைந்தவர்கள் |
அண்ணா நகர் | 55,191 | 53,604 |
கோடம்பாக்கம் | 52,148 | 50,588 |
தேனாம்பேட்டை | 49,332 | 47,798 |
ராயபுரம் | 37,514 | 36,383 |
அடையாறு | 44,168 | 42,885 |
திரு.வி.க. நகர் | 40,968 | 39,623 |
தண்டையார்பேட்டை | 34,980 | 33,850 |
அம்பத்தூர் | 42,421 | 41,448 |
வளசரவாக்கம் | 35,232 | 34,517 |
ஆலந்தூர் | 24,322 | 23,747 |
பெருங்குடி | 25,123 | 24,580 |
திருவொற்றியூர் | 14,769 | 14,354 |
மாதவரம் | 19,913 | 19,484 |
சோழிங்கநல்லூர் | 16,107 | 15,805 |
மணலி | 7,846 | 7,629 |
இதையும் படிங்க: கவச உடை அணிந்து கரோனா நோயாளிகளை சந்தித்த ஆட்சியர்!