ETV Bharat / state

தமிழ்நாட்டில் மேலும் 665 நபர்களுக்குக் கரோனா! - கரோனா பாதிப்பு நிலவரம்

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 665 நபர்களுக்குக் கரோனா வைரஸ் தொற்று புதிதாக கண்டறியப்பட்டுள்ளது. அதேநேரம் இறப்பவர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் மாறியுள்ளது.

கரோனா
கரோனா
author img

By

Published : Jan 15, 2021, 9:07 AM IST

தமிழ்நாட்டில் நேற்று(ஜனவரி 14) 665 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மொத்த எண்ணிக்கை 8,28,952ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் மொத்தம் 2,28,566 பேர் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜனவரி 14ல் வெளிமாநிலத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்தவர்களில் ஒருவருக்குக் கூட தொற்று இல்லை எனத் தெரியவந்துள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25,11,873.

சென்னையில் 195 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையைத் தவிர, 36 மாவட்டங்களில் 470 பேருக்குத் தொற்று உள்ளது.

  • தற்போது 68 அரசு ஆய்வகங்கள், 181 தனியார் ஆய்வகங்கள் என 249 ஆய்வகங்கள் உள்ளன.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், "

  • தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 6,488.
  • மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 1,50,68,940.
  • ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரிகளின் எண்ணிக்கை 60,681.
  • மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 8,28,952.
  • தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 665.
  • சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 195.
  • மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 5,01,048 பேர். பெண்கள் 3,27,870 பேர். மூன்றாம் பாலினத்தவர் 34 பேர்.
  • தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 409 பேர். பெண்கள் 256 பேர்.
  • டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 826 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 8,10,218 பேர்.
  • கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 2 பேர் தனியார் மருத்துவமனையிலும், 2 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 12,246ஆக உள்ளது. இதுவரை சென்னையில் மொத்தம் 4,057 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • முக்கியப் பிரச்னையாக சுவாசப் பிரச்னை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிக அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் 4 பேர். எவ்விதப் பாதிப்பும் இல்லாதவர் ஒருவருமில்லை" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.