ETV Bharat / state

தமிழ்நாட்டில் புதிதாக 6618 பேருக்கு கரோனா!

சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக 6,618 பேர் கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரோனா
கரோனா
author img

By

Published : Apr 11, 2021, 7:41 PM IST

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. மேலும் புதிதாக 6 ஆயிரத்து 618 நபர்களுக்கும், சென்னையில் அதிகபட்சமாக 2 ஆயிரத்து 124 நபர்களுக்கும் கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பெரம்பலூர் மாவட்டத்தில் மட்டும் குறைந்தபட்சமாக 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிற மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேபோல் 87 ஆயிரத்து 767 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மக்கள் நல்வாழ்வு துறை ஏப்ரல் 11ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில், "தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 87 ஆயிரத்து 767 நபர்களுக்கு ஆர் டி பி சி ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன் மூலம் மாநிலத்தில் இருந்த 6 ஆயிரத்து 583 நபர்களுக்கும், ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து வந்த நான்கு நபர்களுக்கும், ஓமனில் இருந்து வந்த ஒருவருக்கும், மேற்கு வங்கத்தில் இருந்து வந்த ஒன்பது பேருக்கும், ஆந்திரப் பிரதேசம் மற்றும் கேரளாவில் இருந்து வந்த தலா 5 நபர்களுக்கும், பிகார் ஜார்காண்ட் கர்நாடகா வங்கதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து வந்த தலா இரண்டு நபர்களுக்கும், அசாம் பீகார் குஜராத் ஆகிய மாநிலங்களில் இருந்து வந்த தலா ஒருவருக்கும் என 6,618 நபர்களுக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 2 கோடியே ஒரு லட்சத்து 89 ஆயிரத்து 603 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் மாநிலத்தில் ஒன்பது லட்சத்து 33 ஆயிரத்து 434 நபர்கள் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு இருந்தனர் என்பது தெரியவந்தது. இவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 41 ஆயிரத்து 955 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் குணமடைந்த 2314 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 78 ஆயிரத்து 571 என உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகளில் பலனின்றி தனியார் மருத்துவமனையில் 14 நோயாளிகளும் அரசு மருத்துவமனையில் 8 நோயாளிகளும் என மேலும் 22 பேர் இறந்துள்ளனர். இதனால் இறந்தவர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 908 என உயர்ந்துள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு

சென்னை - 2,65,126

கோயம்புத்தூர் - 63197

செங்கல்பட்டு - 60792

திருவள்ளூர் - 48200

சேலம் - 34460

காஞ்சிபுரம் - 31943

கடலூர் - 26,559

மதுரை - 22986

வேலூர் - 22201

தஞ்சாவூர் - 21158

திருவண்ணாமலை - 20194

திருப்பூர் - 20639

கன்னியாகுமரி - 18082

தேனி - 17548

விருதுநகர் - 17152

தூத்துக்குடி - 17099

ராணிப்பேட்டை - 16959

திருநெல்வேலி - 16940

திருச்சிராப்பள்ளி - 17134

விழுப்புரம் - 15952

ஈரோடு - 15940

நாமக்கல்- 12532

திருவாரூர் - 12818

திண்டுக்கல் - 12448

புதுக்கோட்டை - 12164

கள்ளக்குறிச்சி - 11142

நாகப்பட்டினம் - 10174

தென்காசி - 9012

நீலகிரி - 8937

கிருஷ்ணகிரி - 9156

திருப்பத்தூர்- 8027

சிவகங்கை - 7338

தருமபுரி - 7060

ராமநாதபுரம் - 6741

கரூர் - 5868

அரியலூர் - 4993

பெரம்பலூர் - 2346

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 990

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1059

ரயில் மூலம் வந்தவர்கள் - 428

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.