ETV Bharat / state

சென்னை-பெங்களூரு இடையே 6 சிறப்பு ரயில்கள்... நாளை முதல் முன்பதிவு - சென்னை-பெங்களூரு இடையே 6 சிறப்பு ரயில்

சென்னை: அக்டோபர் 23ஆம் தேதி முதல் சென்னை, மயிலாடுதுறை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து கர்நாடக மாநிலத்துக்கு 6 சிறப்பு குளிர்சாதனப் பெட்டி ரயில்கள் இயக்கப்படும் எனத் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

trains start between Chennai-Bangalore
trains start between Chennai-Bangalore
author img

By

Published : Oct 20, 2020, 10:19 PM IST

கரோனா பொது முடக்க தளர்வுகளுக்குப் பிறகு, நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், நவராத்திரி, தீபாவளி, துர்கா பூஜை, வடமாநில விவசாய திருவிழாக்கள் என்று அடுத்தடுத்து பண்டிகை காலங்கள் வரவுள்ளன. இதனால் மக்களின் பொது போக்குவரத்து தேவை அதிகரிக்கும். இதனைக் கருத்தில் கொண்டு சிறப்பு ரயில்களை இயக்க இந்தியன் ரயில்வே திட்டமிட்டுள்ளது.

பண்டிகை காலத்தை முன்னிட்டு தமிழ்நாட்டிலிருந்து கர்நாடக மாநிலத்திற்கு வரும் 23ஆம் தேதி முதல் 6 சிறப்புக் குளிர்சாதனப் பெட்டி ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து காட்பாடி, பெங்களூரு கன்டோன்மென்ட் ரயில் நிலையம் வழியாக கே.எஸ்.ஆர் பெங்களூரு ரயில் நிலையத்துக்குச் செவ்வாய்க்கிழமை தவிர வாரத்தின் 6 நாட்கள் சிறப்பு ரயில் இயக்கப்படும்.

கே.எஸ்.ஆர் பெங்களூரு ரயில் நிலையத்திலிருந்து காலை 6.00 மணிக்குப் புறப்பட்டு 11.00 மணிக்குச் சென்னை சென்றடையும். பின் மீண்டும் அங்கிருந்து மாலை 5.30 மணிக்குப் புறப்பட்ட இரவு 10.30 மணிக்குப் பெங்களூரு சென்றடையும்.

மற்றொரு ரயில் காலை 6.20 மணிக்கு பெங்களூருவிலிருந்து புறப்பட்டு அரக்கோணம், காட்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, பெங்களூரு கன்டோன்மென்ட் ரயில் நிலையங்கள் வழியாக மதியம் 12.35 மணிக்கு எம்.ஜி. ஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்தடையும். மறு திசையில் மதியம் 3.30 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டு இரவு 9.35 மணிக்குப் பெங்களூரு சென்றடைகிறது.

மூன்றாவது ரயில் பெங்களூருவிலிருந்து இரவு 10.40 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, கன்டோன்மென்ட் வழியாக மறுநாள் அதிகாலை 4.35 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வருகிறது. அதே போல சென்னையிலிருந்து இரவு 10.55 மணிக்கு கிளம்பி மறுநாள் அதிகாலை 4.45 மணிக்கு பெங்களூரு ரயில் நிலையம் செல்கிறது.

இதைத் தவிர, மைசூரிலிருந்து மயிலாடுதுறை ரயில் நிலையத்துக்கு தினசரி சிறப்பு ரயில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் தஞ்சை, திருச்சி, கரூர், ஈரோடு, சேலம், ஓசூர், பெங்களூரு கன்டோன்மென்ட், மண்டியா வழியாகச் செல்லும். தூத்துக்குடி ரயில் நிலையத்திலிருந்து விருதுநகர், திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், ஓசூர், பெங்களூரு கன்டோன்மென்ட், மண்டியா வழியாக மைசூரு ரயில் நிலையத்துக்கு தினசரி பண்டிகை கால சிறப்பு குளிர்சாதன ரயில் இயக்கப்படுகிறது.

கே.எஸ். ஆர் பெங்களூரு ரயில் நிலையம் முதல் கன்னியாகுமரி வரை மற்றொரு சிறப்பு ரயில் இயக்கப்படும் எனத் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில் சேவைகள் வரும் 23ஆம் தேதி முதல் தொடங்க உள்ள நிலையில், நாளை (அக்டோபர் 21) முதல் இதற்கான முன்பதிவு தொடங்குகிறது.

இதையும் படிங்க: பண்டிகை காலத்தை முன்னிட்டு 196 சிறப்பு ரயில்கள் இயக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.