ETV Bharat / state

பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்: 6 பேர் கைது - crime news

சென்னையில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட சட்டக்கல்லூரி மாணவர் உள்ளிட்ட ஆறு பேரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

பட்டாக்கத்தியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடுவது தொடர்பான காணொலி

author img

By

Published : Jul 20, 2021, 8:40 PM IST

சென்னை: மெரினா கடற்கரை கைலாசபுரம் சுடுகாடு நுழைவு வாயில் அருகே, ஒரு கும்பல் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடுவது போன்ற காணொலி சமூக வலைதளங்களில் வைரலானது. இது குறித்து மயிலாப்பூர் துணை ஆணையர் தலைமையிலான, தனிப்படை காவலர்கள் விசாரணை நடத்தினர்.

கைது செய்யப்பட்ட இளைஞர்கள்
கைதுசெய்யப்பட்ட இளைஞர்கள்

விசாரணையில் கடந்த 18ஆம் தேதி இரவு, திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த ஆந்திர சட்டக்கல்லூரி மாணவர் பரந்தாமனின் (30) பிறந்தநாளை பட்டாக்கத்தியால் கேக் வெட்டி கொண்டாடியது தெரியவந்தது.

பட்டாக்கத்தியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடுவது தொடர்பான காணொலி

இதனையடுத்து திருவல்லிக்கேணியைச் சேர்ந்த பரந்தாமன் (30), மயிலாப்பூரைச் சேர்ந்த நவீன் (28), பிரவீன், நிஷாந்த் குமார் (21), அஜித், அண்ணா சாலையைச் சேர்ந்த கோபி (37) ஆகிய ஆறு பேரை மெரினா காவல் துறையினர் கைதுசெய்தனர்.

இதையும் படிங்க: சிறு கவனக்குறைவு: அந்தரத்தில் பறந்து நொறுங்கிய புதிய கார்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.