தமிழ்நாட்டில் கரோனா தொற்று இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அந்த வகையில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின், சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியாவின் கோவிஷீல்டு ஆகிய மருந்துகள் இந்தியாவில் பயன்படுத்தப்படுகின்றன.
இந்நிலையில் பூனேவில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் 6 லட்சம் கோவிஷீல்டு மருந்துகள் இன்று (ஏப்ரல்.20) சென்னை வந்துள்ளன.
இதையடுத்து சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மையத்திற்கு குளிர்சாதன வாகனம் மூலம் மருந்துகள் கொண்டு செல்லப்பட்டன.
மத்திய அரசிடம் 15 லட்சம் கோவிஷீல்டு மருந்துகள் கோரப்பட்டிருந்தன. தற்போது அதில் 6 லட்சம் கோவிஷீல்ட் மருந்துகள் கிடைத்துள்ளன.
இதையும் படிங்க: பகல் நேரத்தில் வெளி மாவட்ட பேருந்துகள் இயக்கம்