சென்னை கோடம்பாக்கம் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் காவல்துறையினர் கோடம்பாக்கம் பகுதிகளில் உள்ள தனியார் விடுதிகளில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, அப்பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் சிலர் பணம் வைத்து சூதாடுவது தெரியவந்தது. அங்கு சென்ற காவல்துறைனர், சூதாட்டத்தில் ஈடுபட்ட ஆறு பேரை கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து ரூ.2.58 லட்சம் பணம் மற்றும் ஆறு சீட்டுக்கட்டுகளையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கோடம்பாக்கம் காவல்துறையினர், கைது செய்யப்பட்ட நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மதுரை அருகே 30 கிலோ கஞ்சா பறிமுதல் - மூவர் கைது