ETV Bharat / state

சென்னை வந்தடைந்த 6.99 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் - pune

புனேவில் இருந்து விமானம் மூலம் 6 லட்சத்து 99 ஆயிரத்து 100 கோவிஷீல்டு கரோனா தடுப்பூசி மருந்துகள் சென்னை வந்தடைந்தன.

6.99 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசி சென்னை வந்தது

author img

By

Published : Jun 12, 2021, 9:12 PM IST

சென்னை: கரோனா தொற்று பாதிப்பில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பாரத் பயோடெக் நிறுவனத்தால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசியும், சீரம் நிறுவனத் தயாரிப்பில் உருவாக்கப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசியும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாட்டிற்கு கூடுதலாக தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என ஒன்றிய அரசிடம் வலியுறுத்தப்பட்டது.

இன்று புனேவில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் 25 பார்சல்களில் 3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகளும், ஒன்றிய அரசு தொகுப்பிலிருந்து 34 பார்சல்களில் 3 லட்சத்து 99 ஆயிரத்து 100 கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் என மொத்தம் 6 லட்சத்து 99 ஆயிரத்து 100 தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன.

இதனை சுகாதாரத்துறை அலுவலர்கள், சென்னை விமான நிலையத்தில் இருந்து குளிர்சாதன வாகனம் மூலம் சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மாநில தடுப்பூசி சேமிப்பு மையத்திற்க்கு கொண்டு சென்றனர்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டிற்கு வந்தடைந்த 95,000 கோவாக்சின் தடுப்பூசிகள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.