ETV Bharat / state

பச்சைக்கல் லிங்கம் பறிமுதல்-500 ஆண்டு பழமையானதா என ஆய்வு

சென்னையில் 500 ஆண்டுகள் பழமையான உலோக நாகாபரணத்துடன் கூடிய பச்சைக்கல் லிங்க சிலையை , தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

பச்சைக் கல்
பச்சைக் கல்
author img

By

Published : May 17, 2022, 3:49 PM IST

சென்னை: பூந்தமல்லி அருகே 500 ஆண்டுகள் பழமையான உலோக நாகாபரணத்துடன் கூடிய பச்சைக் கல் லிங்க சிலை ஒன்று கடத்தப்பட உள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது . இதை தொடர்ந்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் , சிலையை வாங்குவது போன்று கடத்தல்காரர்களிடம் நடித்துள்ளனர்.

ரூ 25 கோடிக்கு பேரம்: சுமார் 25 கோடி ரூபாய்க்கு பேரம் பேசி , கடத்தல்காரர்கள் பணத்தை வாங்க வந்த போது போலீசார் அவர்களை கையும் களவுமாக பிடித்து சிலையை மீட்டனர். விசாரணையில் , அவர்கள் வெள்ளவேடு புது காலனியை சேர்ந்த பாலா மற்றும் புதுச்சத்திரம் கூடப்பாக்கம் பகுதியை சேர்ந்த பாக்யராஜ் என்பது தெரியவந்தது.

லிங்க சிலையை கடத்திய இருவர் கைது
லிங்க சிலையை கடத்திய இருவர் கைது

மீட்கபட்ட சிலையானது கருடாழ்வாருடன் சுமார் 29 செமீ உயரம், 18 செமீ அகலம் கொண்ட 9 கிலோ 800 பச்சைக்கல் லிங்கம் என்றும் அது 500 ஆண்டுகள் பழமையானது என்றும் கண்டறியப்பட்டுள்ளது. லிங்கத்தின் கீழே சிவபெருமானின் ஐந்து முகங்கள் பொறிக்கப்பட்டுள்ளது எனவும் இது நேபாள பாணியில் உருவானது எனவும் சிலை கடத்தல் தடுப்புபிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: தஞ்சாவூரில் பழமையான நடராஜர் சிலையை விற்க முயன்ற மூவர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.