சென்னை ஹவுரா விரைவு ரயிலில் போதைப்பொருள் கடத்திவருவதாக எழும்பூர் காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் எழும்பூர் ரயில் நிலையத்திற்கு சென்று காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது 50 ஆயிரம் மதிப்புள்ள போதை சாக்லேட்கள், ஹான்ஸ் போன்ற போதைப்பொருள்களை கடத்திவந்த இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இருவரும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிரகாஷ் பிரதான் (26), ருட்டு ஹெம்ப்ராம் (18) என தெரியவந்தது. மேலும் இருவரும் சென்னை பெருங்குடியில் உள்ள இகோ நிறுவனத்தில் வேலை செய்துவருவதாகவும், தனது நிறுவனத்தில் விற்பனை செய்வதற்காக போதைப்பொருள் வாங்கி வந்ததாகவும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
இதையும் படிங்க: ரூ.10லட்சம் மதிப்புள்ள பாண்டிச்சேரி மதுபாட்டில்கள் பறிமுதல்'