திருவள்ளூர்: புது கும்மிடிப்பூண்டியில் உள்ள சீதம்மாள் தெருவைச் சேர்ந்த மூன்று சிறுமிகள் உள்பட ஐந்து பெண்கள் சுமதி (35), அஸ்விதா (15), ஜீவிதா (14), நர்மதா (11), ஜோதிலட்சுமி (30) ஆகிய ஐந்து பேர் துணி துவைக்கச் சென்றுள்ளனர்.
இதில் மூன்று சிறுமிகள் கோயில் குளத்தில் இறங்கி விளையாடிக்கொண்டிருந்தபோது ஆழமான பகுதிக்குச் சென்று நீருக்குள் மூழ்கி தத்தளித்தனர்.
இவர்களைக் காப்பாற்ற சென்ற இரண்டு பெண்களும் நீரில் மூழ்கிய நிலையில் சம்பவ இடத்திலேயே ஐந்து பேரும் உயிரிழந்தனர்.
ரூ.5 லட்சம் நிதியுதவி
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து செய்தி வெளியிட்டுள்ளார்.
மேலும் உயிரிழந்த ஐந்து நபர்களின் குடும்பத்தினருக்குத் தலா ஐந்து லட்சம் ரூபாய் முதலமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:
கோயில் குளத்தில் மூழ்கி மூன்று சிறுமிகள் உள்பட 5 பெண்கள் உயிரிழப்பு!