ETV Bharat / state

5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 5 PM - ஈடிவி பாரத்தின் 5 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் 5 மணி செய்திச் சுருக்கம்...

5 மணி செய்திச் சுருக்கம்
5 மணி செய்திச் சுருக்கம்
author img

By

Published : Jul 29, 2020, 5:13 PM IST

1. கலை அறிவியல் கல்லூரிகளில் வகுப்பு நேரம் மாற்றம்

சென்னை: தமிழ்நாட்டிலுள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலை, மாலை என இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்ட வகுப்புகள் இனி ஒரே பிரிவாக்கப்படும் என உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது.

2. 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு 31ஆம் தேதி வெளியீடு

சென்னை: பதினொன்றாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகளும், 12ஆம் வகுப்பு மறுதேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகளும் ஜூலை 31ஆம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

3. இன்று சர்வதேச புலிகள் தினம்: வன விலங்குகளை காப்பதற்கான முயற்சிகள் எடுப்போம்!

விருதுநகர்: வன விலங்குகளை காப்பதற்கான முயற்சிகளை பொதுமக்கள் எடுக்க வேண்டும் என விலங்குகள் புகைப்பட ஆர்வலர் மோகன் குமார் தெரிவிக்கிறார்.

4. மாரிதாஸுக்கு வாய்ப்பூட்டு போட்ட உயர் நீதிமன்றம்!

நியூஸ் 18 தொலைக்காட்சி குறித்து அவதூறான செய்திகள் வெளியிட்ட மாரிதாஸிடம் ரூ. 1.5 கோடி இழப்பீடு கேட்டு அந்நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணையில் தொலைக்காட்சிக்கு எதிராக அவதூறு செய்திகளை வெளியிட மாரிதாஸுக்கு இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

5. சீனாவை மீண்டும் அச்சுறுத்துகிறதா கரோனா?

கரோனா வைரஸ் பெருந்தொற்றால் உலகம் முழுவதும் இதுவரை ஒரு கோடியே 68 லட்சத்து 83 ஆயிரத்து 647க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 லட்சத்து 62 ஆயிரத்து 473 பேர் இந்த கொடிய வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தனர். ஒரு கோடியே 4 லட்சத்து 45 ஆயிரத்து 764 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர்.

6. கேரளாவில் புதிய தொழில் முனைவோர் திட்டம் அறிமுகம்!

திருவனந்தபுரம்: கரோனா நெருக்கடியினால் உண்டான உற்பத்தி பற்றாக்குறை மற்றும் தொழில் முனைவோர் கடன் பெறுவதில் ஏற்படும் சிக்கல்கள் போன்றவற்றை களைய புதிய தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

7. சபரிமலை விமான நிலையம்: தன் மீதான குற்றச்சாட்டை நிராகரித்த பினராயி விஜயன்

சபரிமலையில் விமான நிலையம் அமைப்பதற்கான ஆலோசகராக அமெரிக்க நிறுவனத்தை நியமித்தது சட்டமீறல் என எதிர்க்கட்சித் தலைவர் வைத்த குற்றச்சாட்டை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மறுத்துள்ளார்.

8. இறுதிக்கட்ட பரிசோதனையில் கரோனாவுக்கு எதிரான mRNA-1273 தடுப்பூசி மருந்து!

நியூயார்க்: கரோனாவுக்கு எதிராக உருவாக்கப்படும் mRNA-1273 தடுப்பூசி மருந்து ஆராய்ச்சியின் இறுதிக்கட்ட சோதனைக்கு 6 பேர் உள்படுத்தப்படுவதாக நியூயார்க் டைம்ஸில் தகவல் வெளியாகியுள்ளது.

9. பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோரிடம் மனிதாபிமானம் தேவையில்லை - அன்புமணி ராமதாஸ்

சென்னை: பெண்களும், குழந்தைகளும் ஒரு துளிகூட அச்சமின்றி சுதந்திரமாகவும், மகிழ்ச்சியாகவும் நடமாடும் பூமியாக தமிழ்நாடு மாற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

10. ஆன்லைன் சூதாட்ட தடைக்கு புதிய சட்டம் வேண்டும் - ராமதாஸ்

சென்னை: அனைத்து மாநிலங்களிலும் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்கு புதிய சட்டம் இயற்றுவது குறித்து மத்திய அரசு ஆராய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.