சென்னை, ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலையில், காவல் ஆய்வாளர் சார்லஸ் தலைமையில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த தனியார் பார்சல் வேன் ஒன்றை மடக்கி அவர்கள் சோதனையிட்டுள்ளனர். அதில், ஐந்து கிலோ தங்க நகைகளும் ஐந்து கிலோ வெள்ளிப் பொருள்களும் இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து விசாரணை நடத்தியதில், பல பிரபலமான நகைக்கடைகளில் இருந்து நகைகள் பெறப்பட்டு, அந்த நகைகளை விமான நிலையத்திலுள்ள கார்கோ லாஜிஸ்டிக்ஸ் ஏஜென்சிக்கு கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. மேலும், நகைகளுக்கு உண்டான ஆவணங்கள் இருந்ததால், அவற்றை சரிப்பார்க்க சேப்பாக்கம் தேர்தல் பறக்கும் படை அலுவலர் நம்பியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
மேலும், ஆவணங்கள் சரிப்பார்க்கும் பணியானது தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், தகுந்த ஆவணங்கள் இருக்கும்பட்சத்தில் நகைகள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் எனவும் அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு!