ETV Bharat / state

சென்னையில் சிலிண்டர் வெடித்து 5 பேருக்கு காயம் - ஆவடி போலீசார் விசாரணை

ஆவடியில் சிலிண்டர் வெடித்த விபத்தில் 5 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

சென்னையில் சிலிண்டர் வெடித்து 5 பேருக்கு காயம்

author img

By

Published : Dec 20, 2022, 10:54 AM IST

சென்னை: ஆவடி கோவில் பதாகை கலைஞர் நகர் 15ஆவது தெருவை சேர்ந்தவர் ரோஜா. இவர் கணவரை இழந்து தன் மகன் சங்கர் ராஜ் (41), மருமகள் அனிதா (36) மற்றும் பேர பிள்ளைகள் 2 பேருடன் வசித்து வருகிறார். இவரது வீட்டில் நேற்றிரவு தீடீரென சமையல் எரிவாயு சிலிண்டர் பலத்த சத்தத்துடன் வெடித்துள்ளது. அதனை தொடர்ந்து வீட்டில் இருந்த ஏசியும், குளிர்சாதன பெட்டியும் வெடித்துள்ளது. இந்த விபத்தில் 5 பேருக்கும் தீ காயங்கள் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக ரோஜாவுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே அக்கம் பக்கத்தினர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்துடன் அவர்களை மீட்டு சென்னை கேம்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இரண்டு நாட்களுக்கு முன்பு கேஸ் சிலிண்டர் லீக் ஆனதால் ரெகுலேட்டர் மாற்றியுள்ளனர். அப்போதும் கேஸ் லீக் ஆகியுள்ளது. இதனால் அவரது மகன் சங்கர் ராஜ் கேஸ் பற்ற வைக்க கூடாது என்று கூறியிருக்கிறார். அதை மீறி கவனக்குறைவில்
ரோஜா கேஸ் பற்ற வைத்ததில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க: வடபழனி கோயிலில் முறைகேடு - இந்து அறநிலையத்துறைக்கு நீதிபதி பரிந்துரை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.