ETV Bharat / state

வடசென்னை தொகுதியில் 5 முனைப் போட்டி; தேர்தல் பரப்புரை தீவிரம்!

சென்னை: வடசென்னை நாடாளுமன்றத் தொகுதியில் திமுக, அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் 5 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த தொகுதியில் இன்று 3 மணிக்கு சின்னம் ஒதுக்கிய பின்னர் தேர்தல் பரப்புரை சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வடசென்னை தொகுதியில் 5 முனைப் போட்டி
author img

By

Published : Mar 28, 2019, 8:00 AM IST

வடசென்னை நாடாளுமன்றத் தொகுதி மிகவும் பின்தங்கிய தொகுதியாகவே இருக்கிறது.திருவொற்றியூர், ஆர்.கே. நகர், பெரம்பூர், கொளத்தூர், திரு.வி.க. நகர், ராயபுரம் ஆகிய தொகுதிகள் வடசென்னை நாடாளுமன்றத் தொகுதியில் அடங்குகின்றன.

இந்ததொகுதியில் 14 லட்சத்து 68 ஆயிரத்து 523 வாக்காளர்கள் உள்ளனர். இந்த நாடாளுமன்றத் தொகுதிக்காக திமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் சார்பாக56 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதில், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் காளியம்மாள், தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ், திமுக வேட்பாளர் கலாநிதி, மக்கள் நீதி மையம் வேட்பாளர் ஏஜி மவுரியா, சுயேச்சையாக போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் சந்தானகிருஷ்ணன் உள்ளிட்ட 24 வேட்பாளர்களின்மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.

திமுக மற்றும் தேமுதிக மாற்று வேட்பாளர்கள் உள்பட வேட்பாளர்கள் கூடுதலாக கொடுத்தது என 32மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.இந்த தொகுதியில் அமமுக, தேமுதிக, திமுக ஆகிய கட்சிகள் இடையேதான் பலத்த போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் மவுரியா இளைஞர்களின் வாக்குகளை ஓரளவு பெறுவதற்கு வாய்ப்புகள் இருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

Intro:வடசென்ன தொகுதியில்5 முனை போட்டி

Body:சென்னை,
வடசென்னை நாடாளுமன்ற தொகுதியில் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் ஐந்து பேர் போட்டியிடுகிறார்கள். இதனால் அந்த தொகுதியில் நாளை 3 மணிக்கு சின்னம் ஒதுக்கிய பின்னர் தேர்தல் பிரச்சாரம் பரபரப்பாக சூடுபிடிக்கும் என தெரிகிறது.
வடசென்னை நாடாளுமன்ற தொகுதி மிகவும் பின்தங்கிய தொகுதியாகவே இருக்கிறது. தலைநகர் சென்னையில் உள்ள தொகுதியாக இருந்தாலும் இங்கு போக்குவரத்து நெரிசலும், குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதும், எண்ணூர் மணலில் உள்ள என்னை நிறுவனங்களின் குழாய்களில் ஏற்படும் உடைச்சல் குடிநீரில் எண்ணெய் கசிவு கலந்து வரும் அவலம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
இந்தப் பகுதியில் முக்கிய பிரச்சினையாக கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகம் அமைந்துள்ளது. இதனை மாற்றி அமைக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் போராடி வந்தாலும் அதற்கான தீர்வு இன்றுவரை எட்ட படாமலேயே உள்ளது.
திருவெற்றியூர், ஆர். கே. நகர் ,பெரம்பூர், கொளத்தூர் ,திரு. வி. க .நகர் ,ராயபுரம் ஆகிய தொகுதிகள் வட சென்னை நாடாளுமன்ற தொகுதியில் அடங்குகின்றன. இந்த தொகுதியில் 14 லட்சத்து 68 ஆயிரத்து 523 வாக்காளர்கள் உள்ளனர்.
ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்காக கடந்த 19ம் தேதி முதல் 26ம் தேதி வரை தங்க சாலையில் உள்ள மண்டலம் ஐந்து மாநகராட்சி அலுவலகத்தில் வடசென்னை நாடாளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர் திவ்யதர்ஷினி வேட்பு மனுக்களை பெற்றார்.
அப்பொழுது திமுக தேமுதிக நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட 56 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். அவர்களின் மனுக்கள் மீதான பரிசீலனை 27 ஆம் தேதி காலை 11 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.
அதில் தகுதியான வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் காளியம்மாள், தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ், திமுக வேட்பாளர் கலாநிதி, மக்கள் நீதி மையம் வேட்பாளர் ஏஜி மவுரியா, சுயேச்சையாக போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் சந்தானகிருஷ்ணன் உள்ளிட்ட 24 வேட்பாளர்கள் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.
அதே நேரத்தில் 32 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. திமுக மற்றும் தேமுதிக மாற்று வேட்பாளர்கள் உள்பட வேட்பாளர்கள் கூடுதலாக கொடுத்த மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
இந்த தொகுதியில் 24 வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் முக்கியமாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், தேமுதிக, திமுக ஆகிய கட்சிகள் இடையே தான் பலத்த போட்டி நிலவும். மக்கள் நீதி மையத்தின் வேட்பாளர் மவுரியா இளைஞர்களின் வாக்குகளை ஓரளவு பெறுவதற்கு வாய்ப்புகள் இருக்கலாம். ஆனால் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் களத்தில் என்றாலும் அவரால் முக்கிய கட்சிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.