ETV Bharat / state

மத்திய கைலாஷ் முதல் சிறுசேரிவரை 5 மேம்பாலங்கள் - அமைச்சர் எ.வ.வேலு - pwd

மத்திய கைலாஷ் முதல் சிறுசேரிவரை ஐந்து முக்கிய சந்திப்புகளில் மேம்பாலங்கள் அமைத்திட திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது என  பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

மத்திய கைலாஷ் முதல் சிறுசேரி வரை 5 மேம்பாலங்கள்

author img

By

Published : Jun 30, 2021, 7:35 PM IST

சென்னை: கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி மைய வளாகத்தில் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நெடுஞ்சாலை துறை ஒப்பந்ததாரர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் நெடுஞ்சாலை துறை முதன்மை செயலாளர் தீரஜ் குமார் கலந்துகொண்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், "சாலை, மேம்பாலங்கள் கட்டும் போது ஏற்படும் சிரமம் குறித்து கேட்டறிந்தேன். மணல் கிடைப்பதில்லை, எம்.சாண்ட் பயன்படுத்த வேண்டும், ஒப்பந்ததாரர் உரிமம் புதுப்பித்தலில் உள்ள சிக்கலை சரி செய்ய வேண்டும், சிமெண்ட் விலை ஏற்றத்தைக் குறைக்க வேண்டும்.

டெல்டா மாவட்டங்களில் கட்டுமான பொருட்கள் கிடைப்பதில்லை, இதனால் கரூர் மாவட்டத்தில் இருந்து எடுத்து வருவதால் போக்குவரத்து செலவு கூடுகிறது. நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் உள்ளதால் நெடுஞ்சாலை துறைக்கு தனியாக வருவாய் அலுவலரை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைளை ஒப்பந்ததாரர்கள் தெரிவித்தனர்.

மேலும் நெடுஞ்சாலை துறை விரிவாக்கத்தின் போது வெட்டப்படும் மரங்களுக்கு புதிய மரக் கன்றுகள் நட்டு பராமரிக்க முக்கியத்துவம் அளிக்கப்படும், கிராமப்புற பகுதிகளில் 10,000 கி.மீ ஊரக சாலைகள் புதுப்பிக்கப்படும், சென்னை மத்திய கைலாஷ் முதல் சிறுசேரி வரை ஐந்து முக்கிய சந்திப்புகளில் மேம்பாலங்கள் அமைத்திட திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது " எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கல்லூரிகள் திறப்பு எப்போது ? - உயர்கல்வித்துறை அமைச்சர் நாளை ஆலோசனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.