ETV Bharat / state

8 மாதங்களில் 5 கோடி..! அதிகரிக்கும் மெட்ரோ ரயில் பயணிகளின் எண்ணிக்கை..! - today latest news in tamil

5 crore passengers traveled by Chennai Metro train: சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த 8 மாதங்களில் 5.81 கோடி பயணிகள் பயணம் செய்துள்ளனர் என சென்னை மெட்ரா ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

5 crore passengers traveled by Chennai Metro train
8 மாதங்களில் 5 கோடி அதிகரிக்கும் மெட்ரோ ரயில் பயணிகளின் எண்ணிக்கை
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 1, 2023, 6:05 PM IST

சென்னை: மெட்ரோ ரயில் திட்டம் சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டது. இந்த திட்டத்தில் தற்போது பச்சை மற்றும் நீலம் என இரண்டு வழித்தடங்கள் வாயிலாக 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இதில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து அண்ணா நகர், திருமங்கலம், கோயம்பேடு, வடபழனி, ஆலந்தூர் வழியாக விமான நிலையம் மற்றும் பரங்கிமலை அடையும் வகையில் ஒரு வழித்தடம் உள்ளது. அதேபோல் விம்கோ நகர், திருவொற்றியூர், சென்னை சென்ட்ரல், ஆயிரம் விளக்கு, சைதாப்பேட்டை, நந்தனம் வழியாக விமான நிலையம் வரை செல்லும் மற்றும் ஒரு வழித்தடமும் உள்ளது.

மேலும், மெட்ரோ ரயில் நிர்வாகமும் பயணிகளுக்குப் பல்வேறு வசதிகளை அறிமுகம் செய்துகொண்டே இருக்கிறது. இதனால் ஒவ்வொரு மாதமும் மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில், சென்னை மெட்ரோ ரயிலில் ஜனவரி மாதத்தில் 66 லட்சம் பயணிகள் பயணித்த நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் 85 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர். அதேபோல், தினசரி பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை 2.5 லட்சமாக இருந்த நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் தினசரி 3 லட்சம் பயணிகள் பயணித்து வருகின்றனர்.

இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில், “சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரயில் பயணிகளுக்கும் பாதுகாப்பான போக்குவரத்து வசதியை அளித்து வருகிறது. அந்த வகையில் 2023ஆம் ஆண்டு ஜூலை மாதத்தை விட அதிகமாக ஆகஸ்டு மாதத்தில் 3 லட்சத்து 36 ஆயிரத்து 215 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளனர்.

நடப்பு அண்டு ஜனவரி மாதத்தில் 66,07,458 பயணிகளும், பிப்ரவரி மாதத்தில் 63,69,282 பயணிகளும், மார்ச் மாதத்தில் 69,99,341 பயணிகளும், ஏப்ரல் மாதத்தில் 66,85,432 பயணிகளும், மே மாதத்தில் 72,68,007 பயணிகளும், ஜூன் மாதத்தில் 74,06,876 பயணிகளும், ஜூலை மாதத்தில் 82,53,692 பயணிகளும் மற்றும் ஆகஸ்டு மாதத்தில் 85,89,977 பயணிகளும் என கடந்த 8 மாதங்களில் (ஜனவரி- முதல் ஆகஸ்ட் வரை ) 5,81,80,065 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

மேலும், மெட்ரோ ரயில் சேவை தொடங்கியதில் இருந்து இதுநாள் வரையிலான பயணிகள் எண்ணிக்கையில் இதுவே அதிக எண்ணிக்கை" என்று மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதேபோல், 2023 ஜூலை மாதத்தில் மட்டும் க்யூஆர் குறியீடு பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 31,05,583 பயணிகளும், பயண அட்டைகளைப் பயன்படுத்தி 47,56,951 பயணிகளும், டோக்கன் முறையைப் பயன்படுத்தி 3,26,491 பயணிகளும், குழு பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 5,685 பயணிகளும் மற்றும் சிங்காரா சென்னை அட்டையை (தேசிய பொது பயண அட்டை) பயன்படுத்தி 3,95,267 பயணிகளும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர் என மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மீண்டும் டோல்கேட் கட்டணம் உயர்வு.. கலக்கத்தில் லாரி உரிமையாளர்கள்.. எந்தெந்த வாகனத்திற்கு எவ்வளவு கட்டணம் உயர்வு?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.