ETV Bharat / state

சென்னையில் நாளை கலைஞர் பன்னாட்டு மராத்தான்: வீரர்களே தயாரா!..... - mk stalin

மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி நினைவாக ஆண்டுதோறும் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டு வரும் நிலையில், நாளை 4 வது ஆண்டாக சென்னையில் மாரத்தான் போட்டி வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.

சென்னையில் நாளை கலைஞர் மராத்தான்
சென்னையில் நாளை கலைஞர் மராத்தான்
author img

By

Published : Aug 5, 2023, 3:44 PM IST

சென்னை: தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நினைவை போற்றும் வகையில், கருணாநிதி நினைவு பன்னாட்டு மாரத்தான் என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. கலைஞர் கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு, கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் சர்வதேச மாரத்தான் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து மாரத்தான் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. பின்னர் 2021-ஆம் ஆண்டு கரோனா பெருந்தொற்றின் காரணமாக மெய்நிகர்( Virtual Reality) மாரத்தானாக நடத்தப்பட்டது.

மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி நினைவாக ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் இந்த மாரத்தான் போட்டிக்கானப் பதிவுக் கட்டணமாகப் பெறப்பட்ட ரூபாய் 23.42 லட்சத்தை, அன்றைய ஆளும் அதிமுக அரசிடம் பேரிடர் நிவாரண நிதியாக வழங்கப்பட்டது. 2021-ம் ஆண்டிலும் மெய்நிகர் மாரத்தானாக நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. அப்போது பெறப்பட்ட ரூபாய்.56.03 லட்சம், கரோனா பேரிடர் நிவாரண நிதியாக முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது என்று அண்மையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிகழ்ச்சி ஒன்றில் கருத்து தெரிவித்திருந்தார்.

நாளை நடைபெறும் மாரத்தான் போட்டி: இந்நிலையில், இந்த ஆண்டு சர்வதேச கலைஞர் நூற்றாண்டு மாரத்தான் போட்டி சென்னையில் நாளை(ஆக.6) அதிகாலை 4 மணிக்கு தொடங்குகிறது. உலகிலேயே முதல்முறையாக திருநங்கைகள் 1,063 பேர் உட்பட மொத்தம் 73,206 பேர் இந்தப் போட்டியில் பங்கேற்கின்றனர். முதல்முறையாக ஒரே நேரத்தில் லாங்கஸ்ட் ரன்னிங் சீரிஸ் (Longest Running Series) என்ற பெயரில் இந்த மாரத்தான் போட்டி நடைபெற இருக்கிறது. இதில் 9 பிரிவுகளாக மொத்தம் ரூ.10.70 லட்சம் மதிப்பில் பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு uள்ளது. பரிசு வழங்கும் விழாவில் முதலமைச்சர் உடன் பல்வேறு நாடுகளின் தூதர்களும் பங்கேற்க உள்ளனர்.

இதில் 5 கி.மீ., 10 கி.மீ., 21.1 கி.மீ., 42.2 கி.மீ. தூரம் என 4 பிரிவாக போட்டிகள் நடக்கின்றது. இப்போட்டிகள் நாளை அதிகாலை 4 மணி முதல் 11 மணி வரை நடைபெறும். அனைத்து பிரிவுப் போட்டிகளும் மெரினா அண்ணா நினைவிடத்தில் தொடங்கி தீவுத்திடலில் நிறைவடையும். மாரத்தான் போட்டிக்காக அப்பகுதிகளில் நாளை அதிகாலை 3 மணிமுதல் 11 மணி வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கூடுதல் ஒத்துழைப்பாக மெட்ரோ ரயில் நிறுவனம் இணைந்து, பங்கேற்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு சிறப்பு பாஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் பங்கேற்க உள்ளவர்களுக்கு இலவச பயண பாஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

போட்டிக்கான நிர்ணியக்கப்பட்ட வெகுமானம்: இதில் 5 கி.மீ., 10 கி.மீ., 21.1 கி.மீ., 42.2 கி.மீ. தூரம் என 4 பிரிவாக நடக்கவிருக்கும் போட்டிகளில், 42-கி.மீ. மற்றும் 21.2மராத்தான் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூபாய் 1 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 10 கி.மீ, போட்டி மற்றும் திருநங்கைகளுக்கன போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூபாய் 50 ஆயிரம் என்றும் 5 கி.மீ., மாரத்தான் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூபாய் 25 ஆயிரம் வழங்கப்படும் என கருணாநிதி நினைவு பன்னாட்டு மாரத்தான் அமைப்பு தெரிவித்து உள்ளது. இதில் பங்கேற்கும் 73,206 பேரிடம் இருந்து பதிவு கட்டணம் ரூபாய் 3.42 கோடி தொகையை சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவை மேம்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: ஆதிச்சநல்லூரில் உலகத் தரத்தில் அருங்காட்சியகம்: அடிக்கல் நாட்டிய அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.