கரோனா ஊரடங்கின் தளர்வுகளுக்கு பிறகு உள்நாட்டு விமானங்களின் சேவை தொடங்கியது. இதில் சென்னையிலிருந்து வெளிமாநிலங்கள், வெளி மாவட்டத்திற்கு 24 விமானங்கள் இயக்கப்படுகின்றன. அதற்கு 3 ஆயிரத்து 200 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
அதேபோல, வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களிலிருந்து 24 விமானங்கள் இன்று சென்னை திரும்புகின்றன. அதில் 2 ஆயிரத்து 100 போ் பயணிக்க முன்பதிவு செய்துள்ளனா். இன்று ஒரு நாளில் சென்னை விமான நிலையத்தில் இயக்கப்படும் 48 விமானங்களில் சுமாா் 5 ஆயிரத்து 300 போ் பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து டெல்லி, கொல்கத்தா, கவுஹாத்தி, வாரணாசி, அந்தமான், திருவனந்தபுரம், கொச்சி, ஹைதராபாத், பெங்களூரு, விசாகப்பட்டினம், மதுரை, கோவை, திருச்சி, சேலம் ஆகிய இடங்களுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் போதிய பயணிகள் இல்லாததால் தூத்துக்குடி, விஜயவாடா, புவனேஸ்வா் உள்ளிட்ட சில இடங்களுக்கு விமான சேவைகள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: ஆன்லைன் வகுப்புகள் குறுகியகால பயன்மட்டுமே தரும்- இன்ஃபோசிஸ் தலைமை அதிகாரி