சென்னை விமான நிலையத்தில் இருந்து 23 உள்நாட்டு விமானங்கள் டெல்லி, கொல்கத்தா, புவனேஸ்வா், கவுகாத்தி, திருவனந்தபுரம், கொச்சி பெங்களூரு, ஹைதராபாத், அந்தமான், மதுரை, கோவை, திருச்சி, தூத்தூக்குடி ஆகிய இடங்களுக்கு இன்று புறப்பட்டுச் சென்றன. இந்த 23 விமானங்களில் பயணம் செய்ய சுமாா் 3 ஆயிரம் பேர் முன்பதிவு செய்தனர்.
இந்த 23 விமானங்களும் சென்னைக்கு திரும்பி வருகின்றன. அந்த விமானங்களில் வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு வருவதற்காக சுமாா் 1,950 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனா். இன்று இயங்கும் 46 உள்நாட்டு விமானங்களில் சுமாா் 5 ஆயிரம் பேர் பயணிக்கின்றனா்.
சேலம், விஜயவாடா, ராஜமுந்திரி, கடப்பா ஆகிய இடங்களுக்கு போதிய பயணிகள் இல்லாததால் அங்கு செல்லவிருந்த விமான சேவை நிறுத்தப்பட்டது.
இதையும் படிங்க:ஊரடங்கு தளர்வு: விமான பயணச் சீட்டுகளின் கட்டணம் கிடுகிடு உயர்வு!