ETV Bharat / state

தமிழ்நாட்டில் கரோனாவால் ஒரே நாளில் 44 பேர் உயிரிழப்பு! - 44 பேர் உயிரிழப்பு

சென்னை: தமிழ்நாட்டில் இன்று ( ஜூன் 15) கரோனா தொற்றினால் 44 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழப்பின் எண்ணிக்கை 479ஆக உயர்ந்துள்ளது.

corona
corona
author img

By

Published : Jun 15, 2020, 10:25 PM IST

தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை மற்ற மாநிலங்களின் எண்ணிக்கையை முறியடித்து, 40ஆயிரத்தைக் கடந்து செல்கிறது. இந்திய அளவில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. குறிப்பாக, சென்னையில் கரோனா தொற்று ருத்ரதாண்டவம் ஆடி வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்கள், அண்டை மாநிலத்திலிருந்து தமிழ்நாடு திரும்புவோரும் கரோனா தொற்றுடன் திரும்புவது மேலும் பீதியை ஏற்படுத்துகிறது.

இந்நிலையில், மக்கள் நல்வாழ்வுத்துறை இன்றைய கரோனா பாதிப்பு குறித்து வெளியிட்ட அறிக்கையில், 'தமிழ்நாட்டில் இன்று (ஜூன் 15) 18 ஆயிரத்து 403 பேருக்கு சளி மற்றும் ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டதில் ஆயிரத்து 843 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, 46 ஆயிரத்து 504 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 537 நபர்களின் பரிசோதனைகள் ஆய்வகங்களில் நடைபெற்று வருகிறது.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 20 ஆயிரத்து 678 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும், இன்று (ஜூன் 15) 797 பேர் பூரண குணமடைந்த நிலையில், இதுவரை 25 ஆயிரத்து 344 பேர் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இன்று (ஜூன் 15) 44 பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 479ஆக உயர்ந்துள்ளது.

சென்னையைப் பொறுத்தவரையில் இன்று (ஜூன் 15) ஆயிரத்து 257 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, 382 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 33ஆயிரத்து 244ஆக உயர்ந்துள்ளது. மேலும், சென்னையில் கரோனா பாதிப்பு 68.02 விழுக்காடாகவும், தமிழ்நாட்டில் 71.04 விழுக்காடாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மாவட்ட வாரியாக கரோனா பாதிப்பு:

  • சென்னை - 33,244
  • செங்கல்பட்டு - 3005
  • திருவள்ளூர் - 1,922
  • காஞ்சிபுரம் - 751
  • திருவண்ணாமலை - 701
  • கடலூர் - 560
  • திருநெல்வேலி - 489
  • விழுப்புரம் - 440
  • மதுரை - 442
  • தூத்துக்குடி - 436
  • அரியலூர் - 393
  • கள்ளக்குறிச்சி - 337
  • ராணிப்பேட்டை - 234
  • சேலம் - 226
  • திண்டுக்கல் - 220
  • கோயம்புத்தூர் - 180
  • விருதுநகர் - 179
  • வேலூர் - 171
  • திருச்சிராப்பள்ளி - 171
  • தஞ்சாவூர் - 167
  • ராமநாதபுரம் - 158
  • தேனி - 157
  • பெரம்பலூர் - 146
  • தென்காசி - 144
  • திருவாரூர் - 138
  • கன்னியாகுமரி - 127
  • நாகப்பட்டினம் - 123
  • திருப்பூர் - 117
  • கரூர் - 94
  • நாமக்கல் - 92
  • ஈரோடு - 73
  • புதுக்கோட்டை - 62
  • சிவகங்கை - 57
  • திருப்பத்தூர் - 48
  • கிருஷ்ணகிரி - 41
  • தருமபுரி - 2
  • நீலகிரி - 17

இதையும் படிங்க: ஸ்டாலினுக்கு அறிவுரை வழங்கிய மாநில பாஜக தலைவர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.