ETV Bharat / state

அண்ணா பல்கலை.யில் இடம் கிடைத்தும் பொறியியல் படிக்க சேராத மாணவர்கள்! - பிஇ, பிடெக் பொறியியல் கலந்தாய்வு

அண்ணா பல்கலைக்கழகத்தில் பிஇ, பிடெக் பொறியியல் படிக்க கலந்தாய்வின் மூலம் இடங்களைத் தேர்வுசெய்த 421 மாணவர்கள் கல்லூரியில் சேரவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம்
அண்ணா பல்கலைக்கழகம்
author img

By

Published : Nov 26, 2021, 1:50 PM IST

சென்னை: பிஇ, பிடெக் பொறியியல் படிப்பில் மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள், அண்ணா பல்கலைக்கழகம், அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளில் சேர்வதற்கு கலந்தாய்வு நடைபெற்றது.

2021-22ஆம் கல்வியாண்டிற்கான பொறியியல் கலந்தாய்வு செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 17 வரை நான்கு சுற்றுகளாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான துணைக் கலந்தாய்வு அக்டோபர் 14 முதல் 24ஆம் தேதி வரை நடைபெற்றது. இடங்களைத் தேர்வுசெய்த மாணவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்கு உரிய கால அவகாசம் வழங்கப்பட்டது.

இந்த ஆண்டு பிஇ, பிடெக் பொறியியல் படிப்பில் சேர்வதற்கு 440 பொறியியல் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 870 இடங்கள் ஒதுக்கப்பட்டன. கலந்தாய்வின் மூலம் சேர்வதற்கு 95 ஆயிரத்து 336 இடங்கள் ஒதுக்கப்பட்டன. அவர்களில் 81 ஆயிரத்து 433 மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளனர்.

அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகளில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 15 ஆயிரத்து 596 இடங்களில் 14 ஆயிரத்து 95 மாணவர்கள் இடங்களைத் தேர்வுசெய்தனர். அவர்களில் 11 ஆயிரத்து 258 மாணவர்கள் கல்லூரிகளில் சேர்ந்தனர். இரண்டாயிரத்து 837 மாணவர்கள் கல்லூரிகளில் சேரவில்லை. அண்ணா பல்கலைக்கழகத்தில் இடங்களைத் தேர்வுசெய்த மாணவர்களில் 421 பேரும், 16 உறுப்புக் கல்லூரிகளில் இடங்களைத் தேர்வுசெய்த ஆயிரத்து 246 மாணவர்களும் கல்லூரியில் சேரவில்லை.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்காகவும், சுயநிதி பொறியியல் கல்லூரியில் காலியாக உள்ள இடங்களில் சேர விரும்பும் மாணவர்களுக்காக இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடத்துவதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதையும் படிங்க: திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த வெள்ளம்: முத்துநகருக்கு ரெட் அலர்ட்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.