தமிழ்நாட்டில் கரோனா பரவல் அதிகரித்துவருவதால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு, காவல் துறையினர் இணைந்து செயல்பட்டுவருகின்றனர்.
குறிப்பாக வணிக வளாகங்கள், திரையரங்குகள், சாலைகளில் முகக்கவசம் அணியாமல், தகுந்த இடைவெளியைப் பின்பற்றாமல் இருந்தவர்களிடமிருந்து 200 ரூபாய் அபராதம் விதிக்க மாநகராட்சி அறிவித்ததையடுத்து காவல் துறையினர் அபராதம் வசூலிக்கின்றனர்.
அதுமட்டுமின்றி வாகனங்களில் தகுந்த இடைவெளியைப் பின்பற்றாமல், முகக்கவசம் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகள் மீதும் வழக்குப்பதிவு செய்து போக்குவரத்து காவல் துறையினர் அபராதம் விதித்தனர்.
அந்தவகையில் தமிழ்நாடு முழுவதும் நேற்று (ஏப்ரல் 20) ஒரேநாளில் முகக்கவசம் அணியாத 27 ஆயிரத்து 716 பேர் மீது வழக்குகள் பதியப்பட்டன. மேலும் முகக்கவசம் அணியாத நான்கு லட்சத்து 60 ஆயிரத்து 53 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது.
அதேபோல தகுந்த இடைவெளியைப் பின்பற்றாதவர்கள் மீதும் கடந்த 8ஆம் தேதி முதல் இதுவரை 14 ஆயிரத்து 819 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. நேற்று (ஏப்ரல் 20) மட்டும் புதிதாக 648 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளனஅ.
இதையும் படிங்க: இரவு நேர ஊரடங்கை மீறியவர்களை எச்சரித்து அனுப்பிய காவல் துறை