தமிழ்நாட்டில் காலியாக உள்ள சூலூர், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய நான்கு தொகுதிகளுக்கு மே 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த நான்கு தொகுதிகளில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது.
அதன்படி, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் 63 வேட்பாளர்களும், ஓட்டப்பிடாரம் தொகுதியில் 15 வேட்பாளர்களும், சூலூர் தொகுதியில் 22 வேட்பாளர்களும், திருப்பரங்குன்றம் தொகுதியில் 37 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.