சென்னை : பழைய வண்ணாரப்பேட்டை கிழக்கு கல்லறை சாலையைச் சேர்ந்தவர் மணிகண்டன் (எ) பூச்சிமணிகண்டன்.
இவர் வண்ணாரப்பேட்டை காவல் நிலைய சரித்திரப்பதிவேடு குற்றவாளி. இவர் மீது சுமார் 35 குற்ற வழக்குகள் உள்ள நிலையில், ஐந்து முறை இவர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
நன்னடத்தை உறுதிமொழி
மணிகண்டன் கடந்த ஜூன் மாதம் வண்ணாரப்பேட்டை துணை ஆணையாளரிடம் தான் திருந்தி வாழப்போவதாகவும், ஒரு வருட காலத்திற்கு எந்தவொரு குற்றச்செயலிலும் ஈடுபடமாட்டேன் எனவும் நன்னடத்தை உறுதிமொழிப் பத்திரம் எழுதி கொடுத்துள்ளார்.
இதேபோல பழைய வண்ணாரப்பேட்டை ராமதாஸ் நகர் பகுதியைச் சேர்ந்த கலை என்ற கலையரசன், கார்த்திக், விக்னேஷ், இவர்களும் வண்ணாரப்பேட்டை காவல் நிலைய சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள்.
இவர்களும் அதேபோன்று நன்னடத்தை உறுதிமொழி பத்திரம் எழுதி கொடுத்தனர்.
ஆனால், மேற்கூறிய குற்றவாளிகள் நான்கு பேரும் வண்ணாரப்பேட்டை பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன், அடிப்படையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வண்ணாரப்பேட்டை காவல் துறையினர் இவர்கள் நான்கு பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
பிணையில் வரமுடியாத அளவுக்கு சிறை தண்டனை
குற்றவாளிகள் நான்கு பேரும் நன்னடத்தை உறுதிமொழிப் பத்திரம் எழுதி கொடுத்த நிலையில், அதனை மீறிய குற்றத்திற்காக, மணிகண்டன் என்கிற பூச்சி மணிகண்டனுக்கு பிரிவு 110 சட்ட விதியின்படி 1 வருட காலத்தில் நன்னடத்தையாக செயல்பட்டு, சிறையில் இருந்த 12 நாட்கள் கழித்து 353 நாட்களுக்குப் பிணையில் வரமுடியாத அளவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
மேலும் நன்னடத்தையை மீறி செயல்பட்ட குற்றவாளி கலை என்கிற கலையரசன், விக்னேஷ் (தவித்), கார்த்திக் ஆகியோருக்கும் நன்னடத்தையாக செயல்பட்டு சிறையில் இருந்த 251 நாள்கள் கழித்து, 114 நாள்கள் சிறை தண்டனை விதித்தும் உத்தரவிடப்பட்டது.
இது துணை ஆணையாளர் உத்தரவின்பேரில் அமலுக்கு வர, நான்கு பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க:மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு: காய்கறி வியாபாரி கைது