காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரத்தை அடுத்த திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(23). இவரlg கூட்டாளி மணி. இருவரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை விடுதியில் தங்கி ஒப்பந்த பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.
பாலகிருஷ்ணனின் நண்பரான, புரசைவக்கத்தை சேர்ந்த முகமது என்பவர் திருவல்லிக்கேணி பகுதியில் தாயிரா மெடிக்கல்ஸ் எனும் மருந்து விற்பனை கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த மூன்று பேரும், வண்ணாரப்பேட்டையை சேர்ந்த முகமது கலீல்(35), முகமது ஜாவித்(23), மற்றும் திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த ஆரிஃப் உசேன் சேர்ந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இருந்து ரெம்டெசிவிர் மருந்தைக் வாங்கியுள்ளனர். அதனைத் தாயிரா மெடிக்கலில் வைத்து விற்பனை செய்துள்ளனர்.
இதுகுறித்து, தகவலறிந்த சென்னை கிழக்கு மண்டல காவல் இணை ஆணையர் பாலகிருஷ்ணனின் தலைமையிலான தனிப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்த நான்கு பேரை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள மணியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளின் ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தி தனிப்படை உதவி ஆய்வாளர், காவலர் ஒருவருடன் சேர்ந்து சுமார் 1 லட்சம் ரூபாயை கையாடல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஆக்ஸிஜன் கேன்கள் விற்பனை அதிகரிப்பு!