சென்னை, எழும்பூர் ரயில்வே காவல் துறையினருக்கு ஹவுரா விரைவு ரயிலில் சிலர் கஞ்சா கடத்திவருவதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில்வே காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இச்சோதனையில் ஹவுரா விரைவு ரயிலில் வந்த பயணிகளிடமிருந்து 36 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணையில் இந்தக் கஞ்சாவை கடத்திவந்தது ஆந்திராவைச் சேர்ந்த பாண்டிபூர்ண சந்திரா, தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த வனராஜ், ஒடிசாவைச் சேர்ந்த துர்சன் என்ற மூவரும்தான் என்பது தெரியவந்தது. மேலும், அவர்கள் மீது கடத்தல் வழக்கு பதியப்பட்டு காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.