சென்னை: பல்வேறு திட்டப் பணிகளுக்கு 31 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்து பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி நேற்று (மே. 26) தொடங்கி வைத்தார். இதில் பல்வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர். இந்நிலையில் பழைய விமான நிலையத்தில் பிரதமர் மோடி சென்ற பிறகு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்பொழுது செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சர் முக ஸ்டாலினை விமர்சித்து பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்தார். அப்பொழுது பேசிய அவர், ’முதலமைச்சரும் நானும் கொள்கையில் 360 டிகிரி மாறுபட்டவர்கள்’ என கூறினார். இந்த வாசகம் தற்போது ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது.
அண்ணாமலையின் இந்த வாசகத்தை பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர் அதாவது, பொதுவாக 180 டிகிரி என்பதுதான் 0 டிகிரியின் எதிரான துருவம் என கூறுவர், 360 டிகிரி என்றால் அது மீண்டும் ஆரம்பமான இடத்தை தான் குறிக்கும். இப்படி இருக்கையில் முக ஸ்டாலினும் 360 டிகிரி மாறுபட்டவர்கள் என அண்ணாமலை கூறுவது அவர்கள் இருவருமே சமம் தான் என கூறுகிறாரா என ட்விட்டரில் நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: "அண்ணாமலை ஒரு அரைவேக்காடு" - சிபிஎம் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விமர்சனம்!