தமிழ்நாட்டில் குற்றப்பிரிவு, இரயில்வே காவல்துறை, மதுவிலக்கு அமல் பிரிவு, போதைப்பொருள் புலனாய்வுப் பிரிவு, சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு, சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவு, சிறப்புப் பிரிவு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பணிபுரியும் 36 காவல்துறை துணைக் கண்காணிப்பாளர்களை பணியிட மாற்றம் செய்து காவல்துறைத் தலைமை இயக்குநர் திரிபாதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதில், போதைப்பொருள் புலனாய்வு துணைக் கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன், மாவட்ட குற்றப்பிரிவு கண்காணிப்பாளர் பாண்டிசெல்வம் உட்பட 36 காவல்துறை துணைக் கண்காணிப்பாளர்களை பணியிட மாற்றம் செய்தும், ஒருசில அலுவலர்களுக்கு பதவி உயர்வும் வழங்கப்பட்டுள்ளது.