கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால், வெளிநாடு வாழ் இந்தியர்கள் பலர் தாயகம் திரும்ப முடியாமல் தவித்துவருகின்றனர். இதனையடுத்து தற்போது அவர்களை தாயகம் அழைத்து வருவதற்காக சிறப்பு விமானங்களை மத்திய அரசு இயக்கத் தொடங்கியுள்ளது.
அதன்படி, இன்று நள்ளிரவு சுமார் இரண்டு மணியளவில் துபாயிலிருந்து இரண்டு சிறப்பு விமானங்கள் சென்னை வந்தடைந்தன. முதல் விமானத்தில் 182 பேரும், இரண்டாவது விமானத்தில் 177 பேரும் என மொத்தம் 359 நபர்கள் சென்னை அழைத்து வரப்பட்டனர்.
அப்போது விமான நிலையம் வந்தடைந்த நபர்களுக்கு முதலில் சுங்க சோதனை மற்றும் குடியுரிமை சோதனை செய்யப்பட்டது. பின்னர் விமான நிலையத்திலேயே கரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்படும் நபர்களுக்கு மருத்துவமனை அழைத்து சென்று சிகிச்சையளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. பின்னர் இதையடுத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மூலம் 359 நபர்களும் தனியார் கல்லூரிக்கும் ஹோட்டல்களுக்கும் அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதையும் படிங்க...மதுக்கடைகளை மூட உத்தரவிட்ட நீதிமன்றம் - ஸ்டாலின் வரவேற்பு