தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட போதிலும் கரோனாவின் தாக்கம் குறையாமல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக, சென்னையில் கரோனா தொற்று தீவிரமடைந்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதுவரை சென்னையில் 1,724 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கரோனா பரவலைத் தடுக்க கிருமி நாசினி தெளிப்பது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற செயல்களில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. மேலும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் வசிக்கும் தெருக்களைத் தனிமைப்படுத்தப்பட்ட பகுதி என மாநகராட்சி அறிவித்தது. அதன்படி இதுவரையிலும் 357 தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை பெருநகர மாநகராட்சிக்குள்பட்ட மண்டலங்களில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளின் பட்டியலை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:
- தண்டையார்பேட்டை - 38 பகுதிகள்
- ராயபுரம் - 80 பகுதிகள்
- திரு.வி.க. நகர் - 70 பகுதிகள்
- தேனாம்பேட்டை - 37 பகுதிகள்
- திருவொற்றியூர் - 20 பகுதிகள்
- அடையாறு - 9 பகுதிகள்
- பெருங்குடி - 5 பகுதிகள்
- ஆலந்தூர் - 2 பகுதிகள்
- வளசரவாக்கம் - 32 பகுதிகள்
- சோழிங்கநல்லூர் - 5 பகுதிகள்
- அண்ணாநகர் - 13 பகுதிகள்
- கோடம்பாக்கம் - 15 பகுதிகள்
- மணலி - 6 பகுதிகள்
- மாதாவரம் - 11 பகுதிகள்
- அம்பத்தூர் - 14 பகுதிகள்
தொடர்ந்து 28 நாள்களுக்கு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கரோனா தொற்று இல்லை என்றால், அந்தப் பகுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியிலிருந்து நீக்கப்படும் என்று மாநகராட்சி கூறியுள்ளது.
இதையும் படிங்க: சென்னையில் டாஸ்மாக் திறக்கப்படாது - தமிழ்நாடு அரசு!