ETV Bharat / state

சென்னையில் ஒரே நாளில் 349 மருத்துவ முகாம்கள்! - சென்னை அண்மைச் செய்திகள்

சென்னை ஒரே நாளில் 349 மருத்துவ முகாம்கள் நடைபெற்றது என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

ஒரே நாளில் 349 மருத்துவ முகாம்கள்
ஒரே நாளில் 349 மருத்துவ முகாம்கள்
author img

By

Published : Jan 10, 2021, 4:46 AM IST

சென்னை: சென்னையில் கரோனா வைரஸ் திருவிக நகர், அண்ணா நகர், அடையாறு போன்ற பகுதிகளில் சற்று அதிகமாக பரவி வருகிறது; இருப்பினும் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் விழுக்காடும் சரி சமமாக உள்ளது. நோய் தொற்றை குறைப்பதற்காக மாநகராட்சியும் சுகாதாரத்துறையும் தினமும் பொது மக்களுக்கு முகக்கவசம் வழங்குவது கபசுர குடிநீர் வழங்குவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, 15 மண்டலங்களிலும் தினமும் மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றது. மே மாதம் 8 ஆம் தேதி முதல் தற்போது வரை மாநகராட்சி சார்பில் மொத்தம் 91 ஆயிரத்து 851 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. அதில் 44,21,689 நபர்கள் பரிசோதிக்கப்பட்டு உள்ளனர்.

சென்னையில் மொத்தம் 85 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். மொத்த மக்கள் தொகையில் 50 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட நபர்கள் இந்த மருத்துவ முகாம்கள் மூலம் பரிசோதிக்கப்பட்டு உள்ளனர். இன்று (ஜன.09) 349 மருத்துவ முகாம்கள் நடைபெற்றது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக, தண்டையார்பேட்டையில் 40 மருத்துவ முகாம்களும், அண்ணா நகரில் 38 மருத்துவ முகாம்களும் நடைபெற்றன. இந்த 349 மருத்துவ முகாம்களில் மொத்தம் 16 ஆயிரத்து 30 நபர்கள் பரிசோதிக்கப்பட்டனர். அதில் 171 நபர்கள் தொற்று அறிகுறி இருந்ததால் அருகில் உள்ள கரோனா பரிசோதனை மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மீதமுள்ள நபர்களுக்கு நோய்களுக்கு ஏற்ற மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: மு.க. அழகிரியின் அரசியல் பிரவேசம் திமுகவின் வெற்றியை பாதிக்கும் - அமைச்சர் செல்லூர் ராஜு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.