1.ஒரு வருடத்தை நிறைவு செய்த மோடி 2.0: நாட்டு மக்களுக்கு பிரதமர் கடிதம்
பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்று ஓராண்டு நிறைவுபெற்ற நிலையில், குடிபெயர் தொழிலாளர்கள் படும் இன்னல்கள், தற்சார்பு இந்தியாவை நோக்கிய பயணம், பொருளாதார மறுமலர்ச்சிக்கான பாதை உள்ளிட்டவை குறித்து நாட்டு மக்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
2.வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் செயல்படுவதற்கான வரையறை அறிவிப்பு!
தமிழ்நாட்டில் தொழில் நிறுவனங்கள், டீ கடைகள், ஓட்டல்கள் இயங்குவதற்கு அனுமதி அளித்து அதற்கான கட்டுப்பாடுகளையும் வரையறையையும் அறிவித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
3.தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் பொதுமுடக்கம் தொடரும் - தமிழ்நாடு அரசு
தமிழ்நாட்டில் ஜூன் 30ஆம் தேதி வரை வழிபாட்டுத் தலங்கள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள் திறப்பதற்கு அனுமதி இல்லை எனவும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி அளித்து தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
4."20 லட்சம் கோடி ரூபாய் கரோனா பேக்கஜ்" பொருளாதாரத்தை மீட்க மிகவும் உதவும் - கடிதத்தில் மோடி உருக்கம்!
நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி எழுதிய கடிதத்தில் 20 லட்சம் கோடி ரூபாய் கரோனா பேக்கஜ் திட்டம் பொருளாதாரத்தை மீட்க மிகவும் உதவியாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
5.டிக்கெட் பரிசோதகர்களுக்கு முகக்கவசம், கையுறை வழங்க உத்தரவு
கரோனா ஊரடங்கு காரணமாகப் பயணிகள் ரயில் சேவை முடக்கப்பட்டுள்ள சூழலில், வரும் ஜூன் 1ஆம் தேதி முதல் நாடு முழுவதும் 200 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.
6.மோடி 2.0 அரசின் முதல் ஆண்டு சாதனைகளால் ஆனது - பாஜக தலைவர் ஜே.பி.நட்டா பெருமிதம்
பிரதமர் மோடியின் இரண்டாவது ஆட்சியின் முதல் ஆண்டில் மத்திய அரசு பல்வேறு சாதனைகளைப் புரிந்துள்ளதென்றும், கரோனா போன்ற சவால்களைத் துணிச்சலுடன் எதிர்கொண்டு வருவதாகவும் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா பெருமிதம் தெரிவித்துள்ளார்.
7.லாக்டவுன் 5.0: சுற்றுலாத்துறைக்கு தளர்வுகள் இருக்கும் என எதிர்பார்ப்பு!
இந்தியாவில் லாக்டவுன் 5.0 அறிவிக்கப்பட வாய்ப்புள்ள நிலையில் என்ன மாதிரியான தளர்வுகள் வரும் என தகவல்கள் வெளியாகி வருகிறது.
8.வானிலையால் தள்ளிப்போகும் ஸ்பேஸ் எக்ஸின் விண்வெளிக் கனவு!
எஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க ராக்கெட் லான்ச் , மோசமான வானிலை காரணமாக மேலும் சில நாட்கள் ஒத்திவைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
9.ஜூன் மாதம் வரை சேவையை நீடித்த மாருதி!
தற்போதைய நிலைமை காரணமாக வாடிக்கையாளர்களுக்கு உத்தரவாதம் மற்றும் சேவை காலக்கெடுவை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்க முடிவு செய்துள்ளதாக மாருதி சுசுகி இந்தியா தெரிவித்துள்ளது.
10.‘என்னால இதுக்கு மேல சிரிப்ப அடக்க முடியலடா’ - அஸ்வின்
இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது ட்விட்டர் பகத்தில் டிக்டாக் காணொலி ஒன்றை பதிவேற்றியுள்ளார்.