சட்டப்பேரவையில் நடைபெற்று வரும் கேள்வி நேரத்தில் பேசிய அதிமுக கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் தாமோதரன் ‘வெள்ளளூர் பகுதியில் துணை மின் நிலையம் அமைக்க அரசு முன் வருமா’ என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி , “தமிழகத்தில் மின் கட்டமைப்பை வலுப்படுத்தும் கூடிய வகையில் 2021- 2022 ல் 216 துணை மின் நிலையங்களும் , 2022 - 2023 ஆண்டுகளில் 100 துணை மின் நிலையங்கள் என மொத்தம் 316 துணை மின் நிலையங்கள் அமைக்க தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி கோவை மாவட்டத்திற்கு 2021 - 22 நடப்பு ஆண்டில் 6 துணை மின் நிலையங்களும், 2022 - 23 ஆண்டுகளில் 7 துணை மின் நிலையங்கள் என மொத்தம் 13 துணை மின் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
மேலும் திருவாரூர் உள்பட 3 கோயில்களில் உள்ள மின் பாதைகள் புதை வழி தடங்கள் ஆக மாற்றப்படும் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க:சட்டப்பேரவையில் கேள்வி பதில் நேரம் - நேரலை