ETV Bharat / state

புகாரில் 31.7 கிலோ நகை கொள்ளை.. 28 கிலோ நகை மட்டுமே மீட்பு.. காவல்துறை விசாரணை - TN police

சென்னை வங்கி கொள்ளையில் 28 கிலோ நகை மீட்கப்பட்டுள்ளது. எனினும் வங்கி தரப்பில் 31.7 கிலோ நகை கொள்ளை போனதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

புகாரில் 31.7 கிலோ நகை கொள்ளை.. 28 கிலோ நகை மட்டுமே மீட்பு.. காவல்துறை கிடுக்குப்பிடி விசாரணை

author img

By

Published : Aug 18, 2022, 7:12 AM IST

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பெட் கோல்டு லோன் வங்கியில் கடந்த 13 ஆம் தேதி புகுந்த கொள்ளையர்கள், கத்தி முனையில் ஊழியர்களை மிரட்டி லாக்கரில் இருந்த நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். 31.7 கிலோ தங்க நகைகளை அந்த வங்கியின் ஊழியரான முருகன், திட்டமிட்டு அவரது நண்பர்களுடன் இணைந்து கொள்ளையடித்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் இவர்கள் தப்பித்துச் செல்வதற்கு, வாகனங்களை சிலர் தந்து உதவி இருப்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து 11 தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இதன் அடிப்படையில் கொள்ளையில் ஈடுபட்ட வில்லிவாக்கத்தைச் சேர்ந்த சந்தோஷ் மற்றும் பாலாஜி ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலும் இவர்களிடமிருந்து 18 கிலோ தங்க நகைகள், இரண்டு கார்கள், இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக கடந்த 15 ஆம் தேதி சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்தார். இதனையடுத்து கொள்ளையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான முருகன் மற்றும் அவரது நண்பர் சூர்யா ஆகியோர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.

இருவரிடம் நடத்திய விசாரணையில் சூர்யா, கொள்ளையடிக்கப்பட்ட மீதமுள்ள தங்க நகைகள் விழுப்புரத்தில் பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்தார். இவ்வாறு அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், காவல்துறையினர் அங்கு சென்று 13 கிலோ நகைகளை மீட்டதாகவும், கொள்ளையடிக்கப்பட்ட முழு நகைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து நகைகளையும் கணக்கெடுக்கும்போது 28 கிலோ நகைகள் மட்டுமே இருந்துள்ளது காவல்துறையினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கைதான முருகன் மற்றும் சூர்யா ஆகியோர் கொள்ளையடித்த அனைத்து நகைகளையும் கொடுத்துவிட்டதாக வாக்குமூலம் அளித்துள்ள நிலையில், வங்கி சார்பில் அளிக்கப்பட்ட புகார் தவறானதா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் நகைகளுக்கு உண்டான ரசீதுகள் ஆகியவற்றை ஆய்வு செய்து வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் உண்மையான மதிப்பு குறித்து வங்கி அலுவலர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சந்தோஷ் மற்றும் பாலாஜி ஆகியோரை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க, அரும்பாக்கம் காவல்துறையினர் தாக்கல் செய்த மனுவிற்கு அனுமதி வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து கொள்ளையர்கள் நான்கு பேரையும் தனித்தனியாக வைத்து காவல்துறையினர் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் செய்தியாளர்களிடம் கூறுகையில், "வங்கி தரப்பில் கொள்ளை போன தங்க நகைகள் குறித்து சரியாக தெரிவிக்கவில்லை. நகைகள் வைத்திருந்த பிளாஸ்டிக் கவர்களின் எடையையும் வைத்தே கூறினர். அதனால் மீண்டும் நகைகள் சரிபார்க்கப்பட்டு வருகிறது. இன்னும் 3 கிலோ தங்க நகைகள் மீட்க வேண்டியதுள்ளது" என கூறினார்.

இதையும் படிங்க: போதை மாத்திரைகள் பதுக்கிய வழக்கில் மூவர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.