சென்னையில் கரோனா வைரஸ் தொற்று கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது. இந்தப் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுத்து வந்தாலும், தொற்றின் தாக்கம் குறையாமல் இருக்கிறது. இந்நிலையில், நேற்றைய தினம் மட்டும் 1484 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 235 பேர், அடுத்தபடியாக தேனாம்பேட்டையில் 188 பேர், அண்ணா நகரில் 179 பேர், தண்டையார்பேட்டையில் 147 பேர் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டல வாரியான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில்,
ராயபுரம் | 5056 பேர் |
திரு.வி.க. நகர் | 2772 பேர் |
வளசரவாக்கம் | 1338 பேர் |
தண்டையார்பேட்டை | 3928 பேர் |
தேனாம்பேட்டை | 3652 பேர் |
அம்பத்தூர் | 1058 பேர் |
கோடம்பாக்கம் | 3267 பேர் |
திருவொற்றியூர் | 1113 பேர் |
அடையாறு | 1725 பேர் |
அண்ணா நகர் | 2960 பேர் |
மாதவரம் | 814 பேர் |
மணலி | 434 பேர் |
சோழிங்கநல்லூர் | 560 பேர் |
பெருங்குடி | 551 பேர் |
ஆலந்தூர் | 132 பேர் |
மொத்தம் 15 மண்டலங்களில் 30,444 பேர் இந்த கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 314 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: உலகளவில் கரோனாவால் 78.55 லட்சம் பேர் பாதிப்பு, 4.31 லட்சம் பேர் உயிரிழப்பு