ETV Bharat / state

சென்னையில் 30 லட்சம் பேர் வீட்டு தனிமை - ஆணையர் பிரகாஷ் தகவல்

சென்னை நகரத்தில் இதுவரை 30 லட்சம் பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

chennai corporation
chennai corporation
author img

By

Published : Oct 5, 2020, 1:58 AM IST

இது குறித்து ஆணையர் பிரகாஷ் மேலும் கூறுகையில், “கரோனா வைரஸ் சென்னையில் சில மண்டலங்களில் தீவிரமாக பரவி வருகிறது. தினமும் சென்னையில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அந்தப் பரவலைத் தடுக்க மாநகராட்சி சார்பில் மருத்துவ முகாம்கள் நடத்துவது, வீடு வீடாக சென்று பரிசோதனை செய்வது, சென்னை மாநகர சுகாதாரத்துறையுடன் இணைந்து ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு மருத்துவர், தனிமைப்படுத்தப்படும் பகுதியில் அவர்களுக்கு பிரித்து கொடுக்கப்படும் இல்லங்களுக்கு சென்று தேவையான உதவிகளை என பல்வேறு நடவடிக்கைகளை கையாண்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக நோய்த்தொற்று உடையவர்கள், நோய்த்தொற்று ஏற்பட்டவர்களில் தொடர்பில் இருந்தவர்கள் நோய்த்தொற்று குணமடைந்து வீடு திரும்பியவர்கள் என பல்வேறு நபர்களை மாநகராட்சி தனிமைப்படுத்தி வருகின்றது.

இதுவரை மொத்தம் 30 லட்சத்து 75 ஆயிரத்து 612 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதில் 28 லட்சத்து 96 ஆயிரத்து 746 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பி விட்டனர். மீதமுள்ள 14 ஆயிரத்து 93 ஆயிரத்து 75 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு மாநகராட்சியால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
அதிகபட்சமாக பரிசோதனை செய்து முடிவுக்காக தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 9 லட்சத்து 20 ஆயிரத்து 220 பேர் உள்ளனர்.

கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் தொடர்பில் இருந்தவர்கள் 8 லட்சத்து 11 ஆயிரத்து 524 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். தற்போது கரோனா தொற்று தொடர்பில் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை பூஜ்யமாக உள்ளது” என்றார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் இன்று 5,489 பேருக்கு கரோனா பாதிப்பு; 66 பேர் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.