ETV Bharat / state

தங்கம் எனக்கூறி பித்தளை கொடுத்து ரூ.30 லட்சம் மோசடி! - gold

சென்னை சவுகார்பேட்டையில் தங்க காசுகள் எனக்கூறி பித்தளை காசுகள் கொடுத்து ரூ.30 லட்சம் மோசடி செய்த நபரை காவல்துறையினர் வலைவீசித் தேடி வருகின்றனர்.

தங்க எனக்கூறி பித்தளை கொடுத்து 30லட்சம் மோசடி

author img

By

Published : May 31, 2022, 9:46 PM IST

சென்னை: சவுகார்பேட்டை தங்கசாலை பகுதியைச் சேர்ந்தவர் ஜீத்மல்(74). இவர் சவுகார்பேட்டை காசி செட்டி தெருவில் பை கடை வைத்து நடத்தி வருகின்றார். கடந்த ஏழு நாட்களுக்கு முன்பு ஜீத்மலுக்கு பழக்கமான நபர் ஒருவர் அவரை அணுகி, தன்னிடம் ஒரு கிராம் எடையுள்ள 4 தங்க காசுகள் இருப்பதாகவும், அதை வைத்து 10ஆயிரம் ரூபாய் கொடுத்தால் போதும் எனத் தெரிவித்துள்ளார்.

உடனே ஜீத்மல் தங்க காசுகளை வாங்கி சோதனையிட்டபோது, அது நிஜ தங்கக்காசாக இருந்ததால் 10 ஆயிரம் கொடுத்து தங்ககாசுகளை வாங்கினார். இதனைத்தொடர்ந்து கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு, அதே நபர் ஜீத்மலை அணுகி, தன்னிடம் 4 கிலோ தங்க காசுகள் இருப்பதாகவும், அதை பெற்றுக்கொண்டு முதலில் 90 லட்சம் தருமாறு கேட்டுள்ளார். இதனை நம்பிய ஜீத்மல் அந்த நபரை தனது மகன் சுரேஷிடம் அனுப்பியுள்ளார்.

அப்போது சுரேஷ், அந்த நபரிடம் அவ்வளவு பணம் இல்லையெனக் கூறி அவரை அனுப்பிவிட்டார். இந்நிலையில் நேற்று மீண்டும் சுரேஷை சந்தித்த அந்த நபர், தங்க காசுகளை வாங்கி கொள்ளுமாறு வற்புறுத்தியதால் சுரேஷ் தன்னிடம் 30 லட்சம் ரூபாய் மட்டுமே உள்ளதாகத் தெரிவித்துள்ளார். உடனே அந்த அடையாளம் தெரியாத நபர் 30 லட்சம் ரூபாய்க்கு 2.5 கிலோ தங்க காசுகள் கிடைக்கும் எனக் கூறியுள்ளார்.

இதை நம்பி, சுரேஷ் அயனாவரம் குன்னூர் சாலை, தாதாவாடி அருகே வைத்து 2.5 கிலோ தங்க காசுகளை வாங்கிக்கொண்டு 30 லட்சம் பணத்தை கொடுக்க, அந்த நபர் பணத்தை வாங்கிக்கொண்டு அங்கிருந்து சென்றார். பின்னர் வீட்டிற்குச்சென்று சுரேஷ் 2.5 கிலோ தங்க காசுகளை சோதனை செய்த போது, அந்த காசுகள் அனைத்தும் பித்தளை காசுகள் எனத் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த உடனே சுரேஷ் இதுகுறித்து குறித்து ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, பித்தளை காசுகளை கொடுத்து மோசடி செய்த அந்த நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டிற்கு ரூ.9,062 கோடி ஜிஎஸ்டி நிலுவைத்தொகையினை விடுவித்தது மத்திய அரசு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.