ETV Bharat / state

3 மணி செய்திச்சுருக்கம் Top 10 news @3PM

author img

By

Published : Oct 7, 2021, 3:12 PM IST

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

1.'ஆப்கனில் முனைவர், இளங்கலை பட்டங்கள் செல்லாது'- கல்வி அமைச்சர்!

ஆப்கானிஸ்தானில் முனைவர் (பி.ஹெச்டி), இளங்கலை உள்ளிட்ட பட்டங்கள் செல்லாது என அந்நாட்டின் உயர் கல்வி அமைச்சரும் தலிபான் தலைவருமான ஷேக் மெல்பி நூரல்லா முனீர் (Sheikh Molvi Noorullah Munir) தெரிவித்துள்ளார்.

2.'நிர்வாகிகள் விதிமீறலில் ஈடுபட்டால் அலுவலர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது’

கூட்டுறவு சங்கத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர், துணை தலைவர் ஆகியோர் முறைகேட்டில் ஈடுபட்டால், அவர்களை இடைநீக்கம் செய்ய கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருக்கு அதிகாரம் உள்ளது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

3.காவல் ஆய்வாளர் வசந்தியின் கணவர் 1 மணிநேரத்தில் ஆஜராக வேண்டும் - நீதிமன்றம் கறார்

வியாபாரியிடம் பணம் பறித்த வழக்கில், காவல் ஆய்வாளர் வசந்தியின் கணவர் ஒரு மணி நேரத்தில் விசாரணை அலுவலர் முன்பாக முன்னிலையாக வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

4.நாடு முழுவதும் பிஎஸ்ஏ ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளைத் தொடங்கிவைத்த பிரதமர்

பிஎம் கேர்ஸ் நிதியத்தின் கீழ் நாடு முழுவதும் நிறுவப்பட்டுள்ள 35 பிஎஸ்ஏ ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.

5.'கோயில்களின் பெயர்கள்; சமஸ்கிருதத்துடன் தமிழும் இடம்பெற நடவடிக்கை'

கோயில்களில் சமஸ்கிருத பெயர்களுடன் தமிழ்ப் பெயர்களும் சேர்ந்து இடம்பெற முதலமைச்சருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

6.24 மணி நேரத்தில் 22 ஆயிரம் பேர் பாதிப்பு!

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 22 ஆயிரத்து 431 பேர் கரோனா வைரஸினால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 318 ஆக உள்ளது.

7.'அர்ஜுன் ரெட்டி' இயக்குநருடன் கைக்கோத்த 'ஸ்பிரிட்' பிரபாஸ்!

பிரபாஸின் 25ஆவது படமான 'ஸ்பிரிட்' படத்தை 'அர்ஜுன் ரெட்டி' பட இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கா இயக்குகிறார்.

8.மீண்டும் இயக்குநராகக் களம் இறங்கிய ரேவதி - கஜோலுடன் கூட்டணி

நடிகை ரேவதி இயக்கும் புதிய படத்தில் நடிகை கஜோல் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

9.கைமாறிய 1,100 கிலோ தங்கம்- சிக்கிய ஸ்ரீ கிருஷ்ணா ஜூவல்லரி!

ஹைதராபாத்தில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா ஜூவல்லரிகளில் அமலாக்கத்துறை அலுவலர்கள் திடீர் சோதனை நடத்திவருகிறார்கள்.

10.இதயத்தை உலுக்கிய காணொலி.. உடனடி கைது தேவை.. வருண் காந்தி!

பாஜக எம்பி வருண் காந்தி வியாழக்கிழமை லக்கிம்பூர் கேரி சம்பவம் தொடர்பாக காணொலி ஒன்றை பகிர்ந்து, “அனைவரின் இதயத்தையும் உலுக்கிய காணொலி, உடனடி கைது நடவடிக்கை தேவை” என வலியுறுத்தியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.