ETV Bharat / state

பேராசிரியர் பணியிடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு:  அரசு பதிலளிக்க உத்தரவு...! - notice order, MHC

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பேராசிரியர், பேராசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

3 percentage reservation in education institutions for physically challenged, notice order, MHC

author img

By

Published : Oct 8, 2020, 1:19 PM IST

மாற்றுத்திறனாளிகள் சம வாய்ப்பு, உரிமைகள் பாதுகாப்பு, முழு பங்களிப்பு சட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் மூன்று சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்துள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் உள்ள 22 பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும், பேராசிரியர், பேராசிரிய அல்லாத அல்லாத பணியிடங்களுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை எனக் கூறி, கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பாரதியார் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் வெங்கடேசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அதில், “பாரதியார், பெரியார், வேளாண் பல்கலைக்கழகம் உள்பட எட்டு பல்கலைக்கழகங்களிடமிருந்து தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலின்படி, 106 பேராசிரியர் பணியிடங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இந்த பல்கலைக்கழகங்களில் 29 இடங்கள் மட்டுமே மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்துள்ளார்.

அதேபோல் தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் 2,398 பேராசிரியர், பேராசிரியர் அல்லாத பணியிடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கியிருக்க வேண்டும். ஆனால் 20 பணியிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது” எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பேராசிரியர், பேராசிரியர் அல்லாத பணியிடங்களில், மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் எனவும், 1996ஆம் ஆண்டு முதல் காலியாக உள்ள இடங்களை கண்டறிந்து நிரப்ப உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரியுருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு, நவம்பர் 27ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி தமிழ்நாடு உயர் கல்வித்துறை செயலாளருக்கும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளருக்கும், கல்லூரி கல்வி இயக்குனருக்கும், மாநில மாற்றுத்திறனாளிகள் நல ஆணையருக்கும் உத்தரவிட்டனர். மேலும், சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களை எதிர்மனுதாரர்களாக சேர்க்கவும் மனுதாரருக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க...'கட்டுமான பணி நிறைவு சான்று... விதியை நீக்கினால் அனுமதியை மீறுவோருக்கு என்ன தண்டனை?'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.